இந்திய ரயில்வே 1297.38 மில்லியன் டன் சரக்குகளைக் கையாண்டு சாதனை
கடந்த ஜனவரி வரை இந்திய ரயில்வே 1297.38 மில்லியன் டன் சரக்குகளைக் கையாண்டு சாதனை படைத்துள்ளது.
2024 ஜனவரி வரை இந்திய ரயில்வே 1297.38 மில்லியன் டன் சரக்குகளைக் கையாண்டு சாதனை படைத்துள்ளது.
2023 ஏப்ரல் முதல் 2024 ஜனவரி வரையிலான காலத்தில் ஒட்டுமொத்த சரக்குக் கையாள்வதில் கடந்த ஆண்டின் 1243.46 மெட்ரிக் டன் சரக்குகளைவிட 1297.38 மெட்ரிக் டன் சரக்கு கையாளப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டைவிட தோராயமாக 53.92 மெட்ரிக் டன் அதிகமாகும். கடந்த ஆண்டு கிடைத்த ரூ.135388.1 கோடி வருவாயைவிட இந்த ஆண்டு ரயில்வேக்கு ரூ.14,0623.4 கோடி வருவாய் கிடைத்துள்ளது.
2023-ம் ஆண்டு ஜனவரி மாதத்தைவிட 2024 ஜனவரி மாதத்தில், சுமார் 8 மெட்ரிக் டன் கூடுதலாக கையாளப்பட்டுள்ளது. இது சுமார் 6.43% முன்னேற்றம் ஆகும்.
2024 ஜனவரியில் 71.45 மெட்ரிக் டன் நிலக்கரியும், 17.01 மெட்ரிக் டன், இரும்புத் தாதுவும், 6.07 மெட்ரிக் டன் வார்ப்பிரும்பு மற்றும் முடிவுற்ற எஃகும், 7.89 மில்லியன் டன் சிமெண்டும் கையாளப்பட்டுள்ளது. 4.53 மெட்ரிக் டன் உணவு தானியங்கள், 5.27 மெட்ரிக் டன் உரங்கள், 4.31 மெட்ரிக் டன் தாது எண்ணெய், 6.98 மெட்ரிக் டன் கொள்கலன்களும் கையாளப்பட்டுள்ளது.
2015க்குப்பின் சுமார் 23,000 வழக்கமான ரயில் பெட்டிகள் எல்.எச்.பி பெட்டிகளாக மாற்றம்
2015-ம் ஆண்டு முதல் ரயில்களில், வழக்கமான (ஐ.சி.எஃப்) ரயில் பெட்டிகளுக்கு பதிலாக எல்.எச்.பி பெட்டிகள் பொருத்தப்பட்டுள்ளன. 2015 முதல் இதுவரை சுமார் 23,000 வழக்கமான பெட்டிகள் எல்.எச்.பி பெட்டிகளாக மாற்றப்பட்டுள்ளன.
சிறந்த ஓட்டுநர் தரக் குறியீடு, மேம்பட்டப் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், விபத்துகளின் போது ரயில் பெட்டிகள் கவிழ்வதைத் தடுக்கவும், சேதத்தைக் குறைக்கவும் உறுதியான மற்றும் வலுவான வடிவமைப்பு, பயோ டாய்லெட்டுகள், அதிக இருக்கை வசதி, பெரிய பரந்த ஜன்னல்கள், ஏசி பெட்டிகளில் எஃப்ஆர்பி (ஃபைபர் வலுவூட்டப்பட்ட பிளாஸ்டிக்) பேனல்கள், மைக்ரோபிராசசர் கண்ட்ரோல்ட் ஏசி போன்றவை எல்.எச்.பி பெட்டிகளின் முக்கிய அம்சங்களாகும்.
மாநிலங்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் ரயில்வே, தகவல் தொடர்பு, மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் இந்தத் தகவலைத் தெரிவித்தார்.
கவச் பயன்பாட்டு நிலவரம்
கவச் பாதுகாப்பு உபகரணம் இதுவரை 1465 வழித்தட கிலோமீட்டர் மற்றும் 139 என்ஜின்களில் (மின்சார மல்டிபிள் யூனிட் ரேக்குகள் உட்பட) தென் மத்திய ரயில்வேயால் பயன்படுத்தப்பட்டுள்ளது.
தற்போது தில்லி - மும்பை & தில்லி - ஹவுரா வழித்தடங்களுக்கு (சுமார் 3000 ரூட் கி.மீ) கவச் டெண்டர்கள் வழங்கப்பட்டுள்ளன.
கவச் அமைப்பு பாதுகாப்பு ஒருமைப்பாடு நிலை-4-க்கு சான்றளிக்கப்பட்டது. மேலும், முழுப் பிரிவும் முழுமையாகப் பொருத்தப்பட்டு சோதிக்கப்பட்டவுடன், ஆணையிடும் நேரத்தில் சுதந்திரமான பாதுகாப்பு மதிப்பீட்டாளரால் (ஐஎஸ்ஏ) சான்றிதழ் வழங்கப்படுகிறது.
வடகிழக்கு எல்லைப்புற ரயில்வே நெடுகிலும் யானைகள் சம்பந்தப்பட்ட விபத்துக்களைத் தடுக்கும் வகையில் 48 கி.மீ. நீளத்திற்கு ஆபத்தான பகுதிகள் கண்டறியப்பட்டப் பகுதிகளில் ஊடுருவல் கண்டறியும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. மேலும், தண்டவாளங்களில் யானைகள் அடிக்கடி நடமாடும் இடங்களின் பாதிப்புத் தன்மையைக் கருத்தில் கொண்டு, இந்திய ரயில்வேயில் பணிகளுக்கும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
மாநிலங்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில், ரயில்வே, தகவல் தொடர்பு, மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் இந்தத் தகவலைத் தெரிவித்தார்.