இந்திய வங்கித்துறை வலுவாக உள்ளது: ரிசர்வ் வங்கி கவர்னர் சக்தி காந்ததாஸ்

அமெரிக்க வங்கிகள் திவாலால் இந்திய வங்கிகளுக்கும், நாட்டின் பொருளாதாரத்திற்கும் பாதிப்பைல்லை என ரிசர்வ் வங்கி கவர்னர் சக்தி காந்ததாஸ் தெரிவித்துள்ளார்.

Update: 2023-03-17 17:15 GMT

ஆர்பிஐ கவர்னர் சக்திகாந்த தாஸ்.

இந்திய வங்கித்துறை வலுவாக உள்ளது என்றும் ,அமெரிக்க வங்கிகள் திவாலால் இந்திய வங்கிகளுக்கும், நாட்டின் பொருளாதாரத்திற்கும் பாதிப்பைல்லை என ரிசர்வ் வங்கி கவர்னர் சக்தி காந்ததாஸ் தெரிவித்துள்ளார்.

ஃபெடரல் வங்கி நடத்திய கருத்தரங்கில் பேசிய ரிசர்வ் வங்கி கவர்னர் சக்தி காந்த தாஸ், இந்திய அரசின் வெளிநாட்டுக்கடன் அளவு கட்டுக்குள் உள்ளது. சர்வதேச அமைப்புகள் வரையறுத்துள்ள அளவுகோளின் படியே இந்தியாவின் கடன் அளவு உள்ளது என்றார்.

மேலும் அவர் உரையில், 2022 ஆம் ஆண்டில் அமெரிக்க டாலர் மதிப்பு அதிகரிப்பு, தொடர்ச்சியாக உலக நாடுகளீன் மத்திய வங்கிகள் வட்டி விகிதத்தை உயர்த்தியதால், பல நாடுகளின் பொருளாதாரம் ஆட்டம் கண்டது.

அந்நாடுகளீன் வெளிநாட்டு கடன் நிர்ணயிக்கப்பட்ட அளவையும் தாண்டி சென்றது. தற்போது 25 சதவீத வளரும் நாடுகளின் பொருளாதார நிலை நெருக்கடியில் உள்ளது . குறைந்த வருவாய் கொண்ட நாடுகளில் 15 சதவீதமும், ஒட்டுமொத்தமாக 45 சதவீத நாடுகள் வெளிநாட்டு கடன் விகித அளவில் நெருக்கடியை சந்தித்து வருகின்றன என்று கூறிய சக்தி காந்த தாஸ். இந்தியாவில் வங்கி துறையும், பொருளாதாரமும் வலுவாக உள்ளது என்றார்.

அமெரிக்க வங்கிகள் திவாலால் இந்திய பொருளாதாரத்திற்கு பாதிப்பு இல்லை. 45 % நாடுகள் அதிக வெளிநாட்டுக்கடனை பெற்றுள்ளன. அதிகரித்த வட்டி விகித உயர்வு பொருளாதார நெருக்கடிக்கு காரணம் என அவர் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News