2021-ம் ஆண்டின், வருடத்திற்கு இருமுறை நடத்தப்படும் இந்திய விமானப்படை தளபதிகளின் முதல் மாநாட்டை மாண்புமிகு பாதுகாப்பு அமைச்சர் 2021 ஏப்ரல் 15 அன்று விமானப்படை தலைமையகமான வாயு பவனில் துவக்கி வைக்கிறார்.
இந்திய விமானப்படையின் செயல்பாட்டு திறன்கள் குறித்து ஆராய்ந்து, எதிர்காலத்துக்கு தேவையான நடவடிக்கைகளை எடுப்பதற்காக இந்த மாநாடு 6 மாதத்திற்கு ஒருமுறை ஏற்பாடு செய்யப்படுகிறது.
இந்திய விமானப்படைக்கு அதன் எதிரிகளை காட்டிலும் அதிக செயல்திறனை வழங்குவதற்கு தேவையான யுக்திகள் மற்றும் கொள்கைகளை வகுக்க, இந்த மூன்று நாள் மாநாட்டின் போது விவாதங்கள் நடைபெறும். மனிதவள மற்றும் நிர்வாக திறன்களை மேம்படுத்துவதற்காக பல்வேறு நல மற்றும் மனிதவள மேம்பாட்டு நடவடிக்கைகளும் விவாதிக்கப்படும்.
விமானப்படை தலைமையகமான வாயு பவனில் வருடம் இருமுறை நடைபெறும் இந்திய விமானப்படை தளபதிகள் மாநாடு, செயல்பாடுகள், பராமரிப்பு மற்றும் நிர்வாகம் குறித்த முக்கிய விஷயங்களை விவாதிப்பதற்கான தளத்தை இந்திய விமானப்படையின் தலைமை அதிகாரிகளுக்கு வழங்குகிறது.
இந்திய விமானப்படையின் மூத்த அதிகாரிகள் இதில் கலந்து கொள்கிறார்கள்.