கோவிட் -19 தடுப்பூசி: செலுத்தப்பட்டவர்களின் எண்ணிக்கை 132.93 கோடியைக் கடந்தது
மத்திய, மாநில அரசுகளின் கூட்டு முயற்சிகளால், தினசரி கோவிட் பாதிப்பு தொடர்ந்து 45 நாட்களாக 15,000-க்கும் கீழ் உள்ளது.;
கோப்பு படம்
நாட்டில் நேற்றைய நிலவரப்படி, 89,56,784 தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளன. இத்துடன் நாட்டில் செலுத்தப்பட்ட மொத்த கோவிட் தடுப்பூசிகளின் எண்ணிக்கை, இன்று காலை 7 மணி நிலவரப்படி 132.93 கோடியைக் (1,32,93,84,230) கடந்தது. 1,38,52,959 அமர்வுகள் மூலம் இந்த சாதனை படைக்கப்பட்டுள்ளது.
நேற்றைய நிலவரத்தில் 8,464 பேர் குணமடைந்துள்ளதால், இதுவரை குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 3,41,22,795 ஆக அதிகரித்துள்ளது.
இதைத் தொடர்ந்து குணமடைந்தோர் விகிதம் தற்போது 98.36 சதவீதமாக உள்ளது. இது கடந்த மார்ச் 2020க்கு பிறகு அதிக அளவாகும். .
மத்திய, மாநில அரசுகளின் கூட்டு முயற்சிகளால், தினசரி கோவிட் பாதிப்பு தொடர்ந்து 45 நாட்களாக 15,000-க்கும் கீழ் உள்ளது. இதுவரை 7,774 பேருக்குப் புதிதாக தொற்று ஏற்பட்டுள்ளது.
நாட்டில் கோவிட் பாதிப்பிற்கு சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 92,281 ஆக உள்ளது. இது கடந்த 560 நாட்களில் மிகக் குறைந்த அளவாகும். நாட்டில் கோவிட் சிகிச்சை பெறுபவர்களின் மொத்த விகிதம் தற்போது 0.27 சதவீதமாக உள்ளது; 2020 மார்ச் மாதத்திற்குப்பின் இது குறைந்த அளவு.
கடந்த 24 மணி நேரத்தில் 11,89,459 கோவிட் பரிசோதனைகள் செய்யப்பட்டன. இதுவரை சுமார் 65.58 கோடி கோவிட் பரிசோதனைகள் (65,58,16,759) செய்யப்பட்டுள்ளன.
வாராந்திரத் தொற்று உறுதி கடந்த 28 நாட்களில் 1 சதவீதத்திற்கும் குறைவாக நீடித்து, தற்போது 0.70 சதவீதமாக உள்ளது. தினசரித் தொற்று விகிதம் 0.65 சதவீதமாக பதிவாகியுள்ளது. இந்த எண்ணிக்கை தொடர்ந்து 69 நாட்களாக 2 சதவீதத்திற்குக் கீழே 104 நாட்களாக 3 சதவீதத்திற்குக் குறைவாகவும் உள்ளது.