இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 42,640 பேருக்கு கொரோனா : 1,167 பேர் பலி

இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 42,640 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. ஒரே நாளில் மட்டும் 1,167 பேர் இறந்தனர்.;

Update: 2021-06-22 05:30 GMT
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 42,640 பேருக்கு கொரோனா : 1,167 பேர் பலி
பைல் படம்
  • whatsapp icon

இது தொடா்பாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :

இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 42,640 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதனால் மொத்தமாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2,99,77,861 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு 6,62,521 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கடந்த 24 மணிநேரத்தில் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பலன் இன்றி 1.167 பேர் உயிரிழந்தனர், இதுவரை கொரோனா நோய்க்கு சிகிச்சை பலன் இன்றி 3,89,302 பேர் உயிரிழந்துள்ளனர்.

புதிதாக 81,839 பேர் குணமடைந்து வீடு திரும்புயுள்ளார். இதுவரை சிகிச்சை பெற்று குணமடைந்து வீடு திரும்பியோரின் எண்ணிக்கை 2,88,76,201 ஆக அதிகரித்துள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News