இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 94,052 பேருக்கு கொரோனா

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 94 ஆயிரத்து 52 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Update: 2021-06-10 05:15 GMT

பைல் படம்

கடந்த 24 மணி கொரோனா தொற்று குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது :

நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 94,052 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதுவரை கொரோனாவுக்கு 2,91,83,121 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த 24 மணி நேரத்தில் 1,51,367 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை 2,76,55,493 பேர் குணமடைந்துள்ளனர். கொரோனாவால் நேற்று ஒரோ நாளில் மட்டும் 6,148 பேர் சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்துள்ளனர். இதுவைர 3,59,676 பேர் சிகிச்சை பலன் இன்றி கொரோனா வைரஸ் நோய்க்கு இறந்துள்ளனர்.

கொரோனாவுக்கு அரசு மற்றும் தனியார் மருத்துவமனையில் 11,67,952 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை 23,90,58,360 பேர் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனர். இவ்வாறு மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Tags:    

Similar News