இந்தியாவில் குறைய தொடங்கியது கொரோனா பாதிப்பு : இன்று 1,14,460 பேருக்கு தொற்று
இந்தியாவில் கொரோனா தொற்று கடந்த சில தினங்களாக குறைய தொடங்கியது. கடந்த 24 மணி நேரத்தில் 1,14,460 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. சிகிச்சை பலன் இன்றி 2,677 பேர் உயிரிழந்தனர்.
இந்தியாவில் நேற்று காலை 7 மணி முதல், இன்று காலை 7 மணி வரை ஏற்பட்ட கொரோனா தொற்று குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது :
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1 லட்சத்து 14 ஆயிரத்து 460- பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. தொற்று பாதிப்பில் இருந்து 1 லட்சத்து 89 ஆயிரத்து 232-பேர் குணம் அடைந்து வீடு திரும்பியுள்ளனர். கொரோனா பாதிப்பால் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 2,677 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்தியாவில் இதுவரை ஏற்பட்ட மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கை 2 கோடியே 88 லட்சத்து 09 ஆயிரத்து 339- ஆக உள்ளது. தொற்று பாதிப்பில் இருந்து 2 கோடியே 69 லட்சத்து 84 ஆயிரத்து 781- பேர் குணம் அடைந்துள்ளனர்.
கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 3 லட்சத்து 46 ஆயிரத்து 759 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா தொற்றுக்காக மருத்துவமனையில் 14 லட்சத்து 77 ஆயிரத்து 799 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.