இந்தியன் என்பது நம் பெருமை வேற்றுமையில் ஒற்றுமை நம் மகிமை

Bharatham Quotes in Tamil-பாரத தேசம் ஆங்கிலேயரிடம்அடிமைப்பட்டுக் கிடந்ததை பல சுதந்திர போராட்ட வீரர்கள் உயிரை பணயம் வைத்து விடுதலை பெற்று தந்தனர். ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 26 ந்தேதியன்று குடியரசுதினம்கொண்டாடப்படுகிறது.

Update: 2022-09-29 11:33 GMT

Bharatham Quotes in Tamil

Bharatham Quotes in Tamil


 இந்தியன் என்பது நம் பெருமை

Bharatham Quotes in Tamil

வேற்றுமையில் ஒற்றுமை நம் மகிமை

குடியரசு என்பதன் பொருள் "மக்களாட்சி" ஆகும். அதாவது, தேர்தல் மூலம் மக்கள் விரும்பிய ஆட்சியாளர்களைத் தேர்ந்தெடுத்துக்கொள்ளும் முறைக்கு குடியாட்சி எனப்படுகிறது. "மக்களுக்காக, மக்களுடைய மக்கள் அரசு" என மிகச்சரியாக குடியரசு என்ற வார்த்தைக்கு இலக்கணம் வகுத்துத் தந்தவர், அமெரிக்க ஜனாதிபதி ஆபிரகாம் லிங்கன். அத்தகைய மக்களுக்கான அரசை இந்தியாவில் ஏற்படுத்தினால்தான், இந்தியா முழு சுதந்திரம் பெற்ற நாடாக ஏற்றுக்கொள்ளப்படும் எனக் கருதி உருவாக்கப்பட்டது தான் இந்திய அரசியல் அமைப்புச் சட்டம்.

இந்திய விடுதலைக்குப் பிறகு 1950 ஆம் ஆண்டிலிருந்து ஒவ்வொரு வருடமும் ஜனவரி 26 ஆம் நாளை இந்திய தேசிய குடியரசு தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு , இந்திய மூவண்ணக் கொடியை ஏற்றி, இந்த குடியரசுதினக் கொண்டாட்டத்தை ஆரம்பித்து வைத்தார். அன்று முதல் ஒவ்வொரு வருடமும் ஜனவரி 26 ஆம் நாள் தம்முடைய தாய் திருநாட்டை காக்க தமது இன்னுயிரையும் நீத்த தியாகிகளை நினைவுகூறும் வகையில் விடுமுறை அளிக்கப்பட்டு, நாடெங்கும் அனைத்து பள்ளிகளிலும், கல்லூரிகளிலும், அலுவலகங்களிலும் தேசிய கீதம் பாடி கொடியேற்றி, இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டு வருகிறது. அதுமட்டுமல்லாமல், ஆண்டுதோறும் குடியரசு தினத்தன்று சிறந்த சேவை புரிந்தோருக்கும், வீரதீர சாகசம் புரிந்தவர்களுக்கும் விருதுகள், பாராட்டுகள், பதக்கங்கள் வழங்கி கௌரவிக்கப்படுகிறது. சுதந்திரம் பெற்ற பிறகு சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமர் என்ற சிறப்பு பெற்ற ஜவர்ஹலால் நேரு அவர்களின் முன்னிலையில் முதல் குடியரசு தின அணிவகுப்பு நடைபெற்றது. மேலும், அன்றைய நாள் புது தில்லியில் குடியரசுத்தலைவர் முன்னிலையில் முப்படைகளின் அணிவகுப்பும், அதைத் தொடர்ந்து, ஒவ்வொரு மாநிலங்களின் சார்பிலும் அவர்களின் சாதனை அலங்கார ஊர்த்தி அணிவகுப்பு நடைபெறும்

Bharatham Quotes in Tamil

குடியரசு தின அணிவகுப்பில் இடம் பெற்ற  வேலுார் கோட்டை தத்ரூப அலங்கார வாகனம் (பைல் படம்)

இன்றைய பொழுதில் இந்தியா உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு, என்பதில் பெருமைக் கொள்கிறோம் என்றால் அதன் பின்னணியில் லட்சக்கணக்கான போராளிகளின் குருதியும், ஆயிரக்கணக்கான தேசத் தலைவர்களின் தியாகமும் மறைந்திருக்கிறது என்றால் யாராலும் மறுக்க இயலாது. சுமார் 100 கோடிக்கும் மேல் மக்கள் தொகையைக் கொண்ட நாடாக இருந்தாலும், சாதி, மதம், மொழி எனப் பல வேறுபாடுகள் இருந்தாலும் அனைவரும் இந்தியர் என்பதில் பெருமைகொள்ளுவோம்.

அடிமைப்பட்டு போன தாய் நாட்டை,தன் இன்னுயிரை துச்சம் என எண்ணி,போராடி சுதந்திரத்தை பெற்று தந்த தலைவர்களையும் வீரர்களையும்நினைவு கூர்ந்து மரியாதை செய்யும்தினம் தான் குடியரசு தினம்.

சமத்துவம் தொடர்ந்து,சம உரிமை நீடித்து,பாரதம் செழித்து,மக்கள் வாழ்வு சிறக்க,இந்தியன் என்பது நம் பெருமை.வேற்றுமையில் ஒற்றுமைஎன்பது நம் மகிமை.

நம்மை பிரிந்து சிறுமை படுத்தும்தீய சக்திகளை வேரறுத்து,இந்தியன் என்று பெருமை கொள்வோம்.

Bharatham Quotes in Tamil

எத்தனை மதம், எத்தனை மொழி,எத்தனை சாதி, எத்தனை பிரிவுகள்,இருந்தாலும், நாம் அனைவரும்பாரதத்தாயின் பிள்ளைகள் தான்.வாழ்க மக்கள்! வளர்க பாரதம்!

தாய் மீதான பாசம் போன்றதேதாய் நாட்டின் மீதான பாசமும்.தாயை நேசிப்போம்!

தாய் நாட்டை மூச்சாய் சுவாசிப்போம்!வந்தேமாதரம்குடியரசு தின வாழ்த்துக்கள்

இளைஞர்கள் கைகோர்த்துநம்பிக்கை கொடிபிடித்துகுடியரசைப் போற்றுவோம்! – நம்தேசக்கொடிதனை ஏற்றுவோம்!!

அன்று முதல் இன்று வரைமுடிவை எட்டா தீப ஒளியாய்வேற்றுமையில் ஒற்றுமைநம்மோடும் நம் உணர்வோடும்தினமும் பயணம் செய்யவழி வகுத்த அரசியல் அமைப்போடுஅனைவரும் பயணிப்போம்!

நெல்லுக்கு விலை கேட்டு நீங்கள் போராடினாலோ,நிலத்திற்கு உரிமை கேட்டு நீங்கள் நிமிர்ந்தெழுந்தாலோவளம் கொழிக்கும் காடுகள் மலைகளைவளைக்கும் முதலாளிகளை நீங்கள் எதிர்த்தாலோதொழிலாளர் உரிமையென்று துடித்தெழுந்தாலோநிச்சயம் முப்படையுடன்உங்களுக்காகவே 'குடியரசு' தயார்!

Bharatham Quotes in Tamil

குடியரசுதின விழா  அணிவகுப்பில் இடம் பெற்ற தமிழக கலாச்சாரத்தினை பிரதிபலிக்கும் அலங்கார வண்டி(பைல்படம்)

 உலகிலேயே மிக நீண்ட அரசியலைப்பு சட்டத்தை எழுதிய டாக்டர். பி.ஆர். அம்பேத்கரை இந்நன்னாளில் நினைவுக்கூறுவோம். அனைவருக்கும் குடியரசு தின வாழ்த்துக்கள்!

அரசியலமைப்பு சட்டம் பிரிவு-15இன் படி மதம், சாதி, இனம், மொழி, தொழில், பாலினம் மற்றும் பிறந்த இடம் ஆகியவற்றின் அடிப்படையில் இந்தியாவின் எந்தவொரு குடிமகனுக்கும் பாகுபாடு காட்டக்கூடாது என்று கூறுகிறது. குடியரசு தின நல்வாழ்த்துக்கள்!

அனைவரும் சமம் என்ற ஜனநாயக நாட்டில் வாழும் இந்திய குடிமக்களுக்கு குடியரசு தின வாழ்த்துக்கள்!

ஜனநாயகம் மலர்ந்த இன்நன்னாளில் அனைவருக்கும் குடியரசு தின வாழ்த்துக்கள்!

குடியரசு தின  அணி வகுப்பில் சுதந்திரபோராட்டத்தை நினைவுபடுத்தும் வகையிலான வண்டி(கோப்பு படம்)

வேற்றுமையில் ஒற்றுமையும், பன்முக கலாச்சாரமும் நமது தேசத்தின் இருவிழிகளாக இருக்கின்றன. அவற்றை பாதுகாப்பதே நமது நோக்கம் என்று உறுதிமொழி ஏற்போம். குடியரசு தின வாழ்த்துக்கள்!

நாட்டை சீரழிக்கும் மதவெறி, சாதிவெறி, பயங்கரவாதம் ஆகியவற்றை வீழ்த்தி நமது முன்னோர்கள் பெற்றுத்தந்த சுதந்திரத்தை பாதுகாத்து நாட்டின் வளர்ச்சியை ஒருங்கிணைத்து முன்னெடுக்க இந்நாளில் அனைவரும் உறுதியேற்போம். குடியரசு தின வாழ்த்துக்கள்!

இந்த நாளில், உங்கள் தாய்நாட்டின் மகிழ்ச்சியான தருணங்களை நீங்கள் பாதுகாப்பீர்கள் என்றும் அதை எல்லா பிரச்சனைகளிலிருந்தும் பாதுகாப்பீர்கள் என்றும் உறுதியளிக்க வேண்டும். இனிய குடியரசு தின வாழ்த்துக்கள்!

இந்த தேசத்தை எப்படி நேசிக்க வேண்டும் என்பதை ஒவ்வொரு ஆசிரியரும் மாணவருக்கு கற்பிக்கட்டும். ஒவ்வொரு பெற்றோரும் தனது பிள்ளைகளுக்கு கற்பிக்கட்டும். நம் தேசத்தின் அழகை வளர்க்கட்டும்.  குடியரசு தின வாழ்த்துக்கள்!

இந்த குடியரசு தினத்தன்று நம் நாட்டின் சுதந்திர போராளிகளின் வெற்றியை நினைவு கூர்ந்து மகிழ்கிறோம். அனைவருக்கும் குடியரசு தின வாழ்த்துக்கள். ஜெய்ஹிந்த்!

குடியரசு தினத்தின் மகிமை என்றென்றும் நம்முடன் இருக்கட்டும். குடியரசு தின வாழ்த்துக்கள்!

இந்த குடியரசு தினத்தன்று, நம் நாட்டின் பொன்னான வரலாறு மற்றும் பாரம்பரியத்தை நினைவில் கொள்வோம். இந்த நாளில் நம் தேசத்தைப் பற்றி பெருமைப்படுவோம். குடியரசு தின வாழ்த்துக்கள்!


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags:    

Similar News