ஜம்மு காஷ்மீரில் தீவிரவாத ஊடுருவல், தாக்குதல் சம்பவங்கள் கணிசமாக குறைந்தது
கடந்த 12 மாதத்தில் 14 தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர், 165 தீவிரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர்.;
ஜம்மு காஷ்மீரில் தீவிரவாத ஊடுருவல் மற்றும் தாக்குதல் சம்பவங்கள் கடந்த 2018ம் ஆண்டிலிருந்து கணிசமாக குறைந்துள்ளன. கடந்த 2018ம் ஆண்டு 143-ஆக இருந்த ஊடுருவல் சம்பவங்கள், இந்தாண்டில் கடந்த அக்டோபர் 31ம் தேதி வரை 28 சம்பவங்களாக உள்ளன. கடந்த 2018ம் ஆண்டு 417 ஆக இருந்த தீவிரவாத சம்பவங்களின் எண்ணிக்கை, இந்தாண்டு நவம்பர் 21ம் தேதி வரை 200-ஆக குறைந்துள்ளது. கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தீவிரவாத தாக்குதலுக்கு, பாதுகாப்பு படையினர் மற்றும் ஜம்மு காஷ்மீர் போலீசார் 32 பேர் பலியாயினர். இந்தாண்டு அக்டோபர் மாதத்தில் இந்த எண்ணிக்கை 19 ஆக குறைந்தது. கடந்த 12 மாதத்தில் 14 தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர், 165 தீவிரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர்.