சபரிமலை ஐயப்பன் கோவிலில் விஷு பண்டிகைக்காக நடை திறப்பு

சபரிமலை ஐயப்பன் கோவிலில் சித்திரை மாதம் மற்றும் விஷு பண்டிகை பூஜைக்காக ஏப்ரல் 19-ம் தேதி வரை நடை திறக்கப்படும் என சபரிமலை நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Update: 2023-04-12 17:45 GMT

பைல் படம்.

சித்திரை மாதம் மற்றும் மற்றும் விஷூ பண்டிகையை முன்னிட்டு சபரிமலை ஐயப்பன் கோயில் நடை நேற்று திறக்கப்பட்டது. வரும் 15-ம் தேதி விஷு பண்டிகையன்று வழக்கம்போல் அதிகாலை நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜை நடைபெறும் என்றும் விஷுக்கனி தரிசனத்திற்கு பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 19-ம் தேதி வரை சித்திரை மாத பூஜைகள் நடத்தப்படும் எனவும் கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

கேரள மாநிலம் சபரிமலை ஐயப்பன் கோவிலில் சித்திரை மாதம் மற்றும் மற்றும் விஷு பூஜைக்காக நடை திறப்பு.விஷு கனி தரிசனம் 15 ம் தேதி அதிகாலையில் நடைபெற உள்ள நிலையில் 19 ம் தேதி வரை பக்தர்களு அனுமதி, ஆன்லைனில் முன் பதிவு செய்யதா பக்தர்களுக்கு நிலக்கல்லில் ஸ்பாட் புக்கிங் வசதி செய்யப்பட்டுள்ளன.

கேரள மாநிலம் சபரிமலை ஐய்யப்பன் கோவிலில் மண்டல, மகரவிளக்கு பூஜைகள் தவிர ஒவ்வொரு தமிழ் மாதத்தை முன்னிட்டும் நடை திறக்கப்பட்டு பூஜைகள் நடைபெறும். அந்த வகையில் சித்திரை மற்றும் விஷு பண்டிகையை முன்னிட்டு கோவில் நடை நேற்று மாலை தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு முன்னிலையில், மேல்சாந்தி ஜெயராமன் நம்பூதிரி நடையை திறந்து வைத்து தீபாராதனை காண்பித்தார்.

பின்னர், 18-ம் படிக்கு கீழ் உள்ள கற்பூர ஆழியில் தீ மூட்டப்படும். தொடர்ந்து பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள். நாளை முதல் தினசரி அதிகாலை 4.30 மணிக்கு பள்ளியுணர்த்தல், 5 மணிக்கு நடைதிறப்பு, நிர்மால்ய தரிசனம், கணபதி ஹோமம், 5.30 மணி முதல் 9 மணி வரை நெய்யபிஷேகம், அஷ்டாபிஷேகம், உஷ பூஜை, உச்ச பூஜை ஆகியவற்றை தொடர்ந்து மதியம் 1 மணிக்கு நடை அடைக்கப்படும்.

மீண்டும் மாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு 6.30 மணிக்கு தீபாராதனை, இரவு 7 மணிக்கு புஷ்பாபிஷேகம், அதைத்தொடர்ந்து படி பூஜை ஆகியவை நடைபெறும். பின்னர் இரவு 10 மணிக்கு நடை அடைக்கப்படும்.தொடர்ந்து 15-ந் தேதி சித்திரை விஷு பண்டிகையன்று வழக்கம்போல் அதிகாலை நடை திறக்கப்பட்டு அய்யப்ப சாமிக்கு முன் விஷுக்கனி தரிசனத்திற்கு வைக்கப்படும்.

அதைத்தொடர்ந்து காலை 7.30 மணி வரை அய்யப்ப பக்தர்கள் விஷு கனி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள். விஷு பண்டிகையை முன்னிட்டு தந்திரி, மேல்சாந்தி ஆகியோர் பக்தர்களுக்கு நாணயங்களை கை நீட்டமாக வழங்குவார்கள். 19-ந் தேதி வரை சித்திரை மாத பூஜைக்காக நடை திறக்கப்படும். வழக்கமான பூஜைகளுடன், உதயாஸ்தமன பூஜை, சகஸ்ரகலச பூஜை போன்ற பூஜைகள் நடைபெறும். 19-ந் தேதி இரவு 10 மணிக்கு நடை அடைக்கப்படும்.

9 நாட்கள் நடைபெறும் சிறப்பு பூஜைகளையொட்டி, சபரிமலை தரிசனத்திற்கான ஆன்லைன் முன்பதிவு செய்யாத பக்தர்கள் முன் பதிவு செய்ய நிலக்கல் பகுதியில் ஸ்பாட் புக்கிங் வசதி செய்யப்பட்டுள்ளன.

Tags:    

Similar News