இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 8,439 பேருக்கு புதிதாக தொற்று

இந்தியாவில் நேற்று காலை 8 மணி முதல் இன்று காலை 8 மணி நேரம் வரையில் புதிதாக 8,439 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

Update: 2021-12-08 05:39 GMT

பைல் படம்

கொரோனா பாதிப்பு குறித்து மத்திய சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது :

நாடு முழுவதும் இதுவரை 65.06 கோடி கொரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளது. நாட்டில் தற்போது கொரோனா பாதித்து சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை 93,733 ஆகக் குறைந்துள்ளது. இது 555 நாள்களுக்குப் பிறகு பதிவாகும் குறைவான எண்ணிக்கையாகும்.

அதுபோல, கடந்த 24 மணி நேரத்தில் 9,525 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்துள்ளனர். கொரோனாவுக்கு 195 பேர் பலியாகினர். பலியானோரின் எண்ணிக்கை 4,73,952 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை நாட்டில் 129.5 கோடி கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News