நெரிசலில் 122 பேர் மரணம்..! ஹத்ராஸில் நடந்த மதக்கூட்டத்தில் துயரம்..!
மதக்கூட்டத்தில் கலந்து கொண்ட குடும்பத்தினர் பலர் நெரிசலில் சிக்கியுள்ளனர். இதில் 122 பேர் வரை மரணமடைந்திருப்பதாக தகவல்.;
உத்தரப்பிரதேச மாநிலம் ஹத்ராஸில் நடைபெற்ற மதக் கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 27 பேர் மரணம் என முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.
மதக்கூட்டத்தில் பல்வேறு நபர்கள் குடும்பத்துடன் கலந்து கொண்ட குழந்தைகள் உட்பட 122 பேர் இதுவரை உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
எஸ்எஸ்பி ராஜேஷ் குமார் சிங் கூறுகையில், ஹத்ராஸ் மாவட்டத்தில் நடைபெற்ற மத கூட்டம் ஒன்றில் ஏராளமான பொதுமக்கள் குடும்பத்துடன் கலந்துகொண்டுள்ளனர். எதிர்பாராத விதமாக அங்கு ஏற்பட்ட கூட்ட நெரிசலில் பலர் சிக்கியுள்ளனர். தற்போது வரை 27 பேரின் உடல்களை மருத்துவமனைக்கு கொண்டு வந்துள்ளனர். அவர்களில் 23 பெண்கள், 3 குழந்தைகள், ஒருவர் ஆண். இதுபோல பலர் அங்கு காயமடைந்துள்ளனர். அவர்களில் பலர் இன்னும் மருத்துவமனைக்கு கொண்டு வரப்படவில்லை என்று தெரிகிறது.
இதுகுறித்து மேலும் விசாரணை நடைபெற்று வருகின்றது என தகவல் வெளியாகியுள்ளது. சிவ பெருமானுக்குரிய ஒரு இந்து சமய விழா அந்த பகுதியில் நடந்துள்ளது. பக்தி மிகுதியில் கலந்து கொண்ட மக்கள் எதிர்பாராத விதமாக நெரிசலில் சிக்கி பாதிக்கப்பட்டுள்ளனர். இன்னும் பலர் இறந்திருக்கக்கூடும் எனும் தகவலால் மேலும் அச்சமூட்டுகிறது.
இதுகுறித்து தகவல் அறிந்த உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் உடனடியாக சில அதிகாரிகளை சம்பவம் நடந்த இடத்துக்கு அனுப்பி வைத்திருக்கிறார் என்கிறார்கள். பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் பல நடவடிக்கைகளை எடுக்க உத்தரவிடப்பட்டிருக்கிறது. விரைவில் இதுகுறித்த தெளிவான தகவல்கள் வெளியாகும்.
சமீபத்திய தகவலின்படி அங்கு நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 122 என்று தெரியவந்துள்ளது.