பெரிய பணக்காரரான முகேஷ் அம்பானிக்கு ஹேப்பி பர்த்டே

முகேஷ் அம்பானி பக்காவான டீடோட்டலர் . தன் வாழ்நாளில் ஒரு முறை கூட மதுவை சுவை பார்க்காதவர். ஒரு சுத்தமான சைவம்;

Update: 2022-04-19 03:27 GMT

ஏகப்பட்ட பெருமைகளுக்கு சொந்தக்காரரான முகேஷ் அம்பானிக்கு இன்னிக்கு ஹேப்பி பர்த் டே

இந்தியாவின் ரிலையன்ஸ் நிறுவனத்தின் தலைவர். ஆசியாவின் பணக்காரர் பட்டியலில் முதல் இடத்தைப் பிடித்தவர்.200 மில்லியன் சந்தாதாரர்களை கொண்ட ஒரு மிகப்பெரிய வாடிக்கையாளர்களின் நிறுவனமான ஜியோ-வை உருவாக்கியவர். இந்தியாவில் உள்ள ஆயிரக்கணக்கான தொழிலதிபர்களில் Z- வகை பாதுகாப்புடன் உலா வரும் ஒரே தொழில் அதிபர்

பக்காவான டீடோட்டலர் . தன் வாழ்நாளில் ஒரு முறை கூட மதுவை சுவை பார்க்காதவர். ஒரு சுத்தமான சைவம் என்பதும் குறிப்பிடத்தக்கது. இப்படி ஏகப்பட்ட பெருமைகளுக்கு சொந்தக்காரரான முகேஷ் அம்பானிக்கு இன்னிக்கு ஹேப்பி பர்த் டே

இந்தியாவின் செல்வந்தர்கள் குடும்பத்தில் ஒன்று அம்பானி குடும்பம் என்ப்து தெரிந்ததே. நீட்டா அம்பானியில் இருந்து ஆகாஷ் அம்பானி வரை, முகேஷ் அம்பானி மற்றும் மறைந்த திருபாய் அம்பானி வரை அனைவரும் பெரும் செல்வந்தர்களே. முகேஷ் அம்பானியின் அண்டிலியா வீடு உலகின் கவனத்தை பெற்ற ஒன்று ஆகும்.

கடந்த 1957 ஆம் ஆண்டு பிறந்த முகேஷ் அம்பானிக்கு தற்போது 65 வயது ஆகின்றது. இந்தியாவின் மிகப்பெரிய தொழிலதிபரான அவருக்கு 1.5 லட்சம் கோடி சொத்து உள்ளது. அவர் அடையாத உயரம் இல்லை, அவர் பெறாத அதிர்ஷ்டம் இல்லை. பணம், புகழ், அதிகாரம் ஆகியவற்றில் அம்பானிகள் உலகளாவிய அளவில் தங்கள் வியாபார வல்லமை மற்றும் நற்பெயரைப் பெற்றுள்ளனர். அதனால் தான் அவர்கள் உலக அளவில் போற்றப்படுகின்றனர்.

கடந்த பல ஆண்டுகளாக அம்பானியின் ரிலையன்ஸ் மிகப்பெரிய சாதனை லாபத்தை பெற்று வருகிறது. சமுதாயத்திற்கு பல நன்மைகளையும் செய்து வருகிறது. ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஜியோ டிஜிட்டல் துறையில் காலடி எடுத்து வைத்ததும், நீட்டா அம்பானியின் ரிலையன்ஸ் பவுண்டேஷன் , உலகின் 33வது செல்வந்தர் என்ற இடத்தை அவர்களுக்கு பெற்றுக் கொடுத்தது.

மும்பையில் உள்ள முகேஷ் அம்பானி வீட்டில் இதுவரை அவரது பிறந்த நாளான ஏப்ரல் 19 ஆம் தேதி மிகப்பெரிய விழா கொண்டாடியதை யாரும் கேள்விப்பட்டிருக்க மாட்டார்கள். கடந்த 2007ஆம் ஆண்டு அவருடைய 50வது பிறந்த நாள் மட்டும் இதற்கு விதிவிலக்கு. அவர் ஒரு நல்ல குடும்பஸ்தர் என்பதால் தன்னுடைய குடும்பத்தை சேர்ந்தவர்களை மிகவும் விரும்பியவர்

அவரால் இந்த உலகத்தில் எதை வேண்டுமானாலும் வாங்க முடியும். ஆனால் அவர் ஒரு எளிய நடுத்தர வர்க்கத்து வாழ்க்கையையே விரும்புபவர். பெரும்பாலும் அவர் கருப்பு பேண்ட் மற்றும் வெள்ளை சட்டையத்தான் அணிவார். மிக உயர்ந்த ஆடைகள், நவநாகரீக உடைகளை அவர் என்றுமே விரும்பியதில்லை. குடும்பத்தினர்களுடன் அதிக நேரம் செலவு செய்ய வேண்டும் என்பதில் மிகுந்த விருப்பம் கொண்டவர். குறிப்பாக ஞாயிற்றுகிழமைகளில் அவர் குடும்பத்துடன் ரெஸ்டாரெண்ட் சென்று கலாச்சாரமான சைவ உணவுகளை விரும்பி சாப்பிடுவார். அதிலும் கூட அவர் உயர்ரக உணவை எடுத்து கொள்வதில்லை.

ஒரு பேட்டியில் தான் தன்னுடைய தந்தையை போலவே இயற்கை ரசிப்பவர் என்று முகேஷ் அம்பானி கூறியுள்ளார். சிறு வயதில் தன்னுடைய தந்தையுடன் காடுகளுக்கு நடந்து சென்று அங்குள்ள அருவிகளை குளித்ததை அவர் ஞாபகப்படுத்துவார். எனவே அவரிடம் உள்ள இந்த இயற்கையை ரசிக்கும் தன்மை அவருடைய தந்தையிடம் இருந்து வந்தது என்பதை சொல்லவே தேவையில்லை.

திருபாய் அம்பானியை போலவே முகேஷ் அம்பானியும் ஒரு தந்தையாக தனது கடமையை சரியாக செய்து வருகிறார். தந்தை தனக்கு அளித்த சுதந்திரத்தை போலவே தனது மகன் ஆகாஷ் அம்பானிக்கும் அவர் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரியின் பொறுப்பை கொடுத்து அழகு பார்த்து வருகிறார். அதேபோல் அதேபோல் இஷா அம்பானி தற்போது ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் இயக்குனராகவும் உள்ளார்

மும்பையின் இதயப்பகுதியில் முகேஷ் அம்பானி கடந்த 2003ஆம் ஆண்டு சர்வதேச தரத்தில் ஒரு பள்ளியை தொடங்கினார். ஷாருக்கான், சச்சின் போன்ற பல பெரிய ஸ்டார்களின் குழந்தைகள் இந்த பள்ளிகளில் தான் படித்தனர்.

கடந்த 2010ஆம் ஆண்டு குஜராத்தை சேர்ந்த மஹாராஜா சாயாஜிராவ் பல்கலைக்கழகம் அவருக்கு டாக்டர் பட்டம் அளித்த்து. அவருடைய தொடர்ச்சியான வெற்றிக்காக இந்த பட்டம் வழங்கப்பட்டது.

Tags:    

Similar News