குஜராத் வெற்றி: பிரதமர் மோடிக்கு தங்கத்தில் சிலை

குஜராத்தில் பாஜகவின் வெற்றியை கொண்டாடும் வகையில் சூரத் நகை கடைக்காரர் ஒருவர் பிரதமர் மோடிக்கு தங்கத்தில் சிலை செய்துள்ளார்.

Update: 2023-01-20 14:30 GMT

உள்படம்: பிரதமர் மோடியின் மார்பளவு தங்கசிலை. 

கடந்த ஆண்டு டிசம்பரில் குஜராத் மாநில சட்டசபை தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் 182 இடங்களில் பாஜக 156 இடங்களில் வெற்றி பெற்றது. இந்நிலையில் பாஜகவின் அமோக வெற்றியை நினைவுகூரும் குஜராத் மாநிலம் சூரத் நகரைச் சேர்ந்த நகை கடைக்காரர் ஒருவர், 18 காரட் தங்கத்தில் 156 கிராம் எடையுள்ள பிரதமர் நரேந்திர மோடியின் மார்பளவு சிலையை செய்துள்ளார். ராதிகா செயின்ஸ் நகை தயாரிப்பு நிறுவனத்தின் உரிமையாளர் பசந்த் போஹரா இந்த சிலையை செய்துள்ளார். இந்த சிலைக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. பலர் இந்த தங்க சிலையை வாங்க ஆர்வமாக உள்ளனர்.

ஆனால் சிலையை விற்க பசந்த் முடிவு செய்யவில்லை. இதுகுறித்து அவர் கூறும்போது, "நான் நரேந்திர மோடியின் ரசிகன், அவருக்காக ஏதாவது செய்ய விரும்பினேன். கிட்டத்தட்ட 20 கைவினைஞர்கள் சேர்ந்து மூன்று மாதங்களாக இந்த மார்பளவு சிலையை உருவாக்கினர். இது இப்போதைக்கு விற்பனைக்கு இல்லை. இந்த சிலையை செய்ய 11 லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்கம் பயன்படுத்தப்பட்டுள்ளது. டிசம்பரில் இந்த சிலை தயாராகிவிட்டாலும், அதன் எடை 156 கிராமுக்கு சற்று அதிகமாக இருந்தது. பாஜக 156 இடங்களைப் பெற்றுள்ளது என்பதை அறிந்த கைவினைஞர்கள் எடையைக் குறைக்க சில மாற்றங்களைச் செய்தனர்" என்று கூறினார்.

Tags:    

Similar News