456 கோடீஸ்வரர்கள் போட்டியிடும் குஜராத் சட்டசபை தேர்தல்

குஜராத் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் 1,621 வேட்பாளர்களில் 456 பேர் கோடீஸ்வரர்கள். பாஜகவின் ஜெயந்தி படேல் சொத்து மதிப்பு 661 கோடி

Update: 2022-11-28 14:01 GMT

குஜராத் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் 1,621 வேட்பாளர்களில் 456 பேர் அல்லது சுமார் 28 சதவீதம் பேர், 1 கோடி ரூபாய் அல்லது அதற்கு மேற்பட்ட சொத்து மதிப்புள்ள 'கோடீஸ்வரர்கள்' என்று ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம் (ADR) தெரிவித்துள்ளது.

மொத்தம் 154 'கோடீஸ்வரர்' வேட்பாளர்களுடன் பிஜேபி முதலிடத்திலும், காங்கிரஸ் 142 பேரும், ஆம் ஆத்மி கட்சியில் 68 பேரும் களத்தில் உள்ளனர். தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் சராசரி சொத்து மதிப்பு ரூ.2.56 கோடி என்று ஏடிஆர் அறிக்கை தெரிவித்துள்ளது.

காந்திநகரில் உள்ள மான்சா தொகுதியில் போட்டியிடும் பாஜகவின் ஜெயந்தி படேல் ரூ.661 கோடி சொத்துக்களுடன் பெரிய பணக்கார வேட்பாளராக உள்ளார், பாஜகவின் பல்வந்த் ராஜ்புத் ரூ.372 கோடியும், சித்பூரில் போட்டியிடும் பாஜகவின் பல்வந்த் ராஜ்புத் ரூ.372 கோடியும், ஆம் ஆத்மி கட்சியின் தபோய் தொகுதியில் போட்டியிடும் அஜித்சிங் தாக்கூர். 342 கோடி சொத்துக்களுடன் உள்ளனர்.

டிசம்பர் 1ஆம் தேதி நடைபெற உள்ள 89 தொகுதிகளுக்கான முதல் கட்டத் தேர்தலில் 788 போட்டியாளர்களில் 221 'கோடீஸ்வரர்கள்' களத்தில் உள்ளனர்.

ஏடிஆர் அறிக்கையின்படி, டிசம்பர் 5 ஆம் தேதி இரண்டாம் மற்றும் இறுதிக் கட்டத் தேர்தல் நடைபெறவுள்ள 93 இடங்களுக்கான தேர்தலில் மொத்தமுள்ள 833 வேட்பாளர்களில் 245 பேர் உள்ளனர்.

தேர்தலில் போட்டியிடும் 6 வேட்பாளர்கள் சொத்துக்கள் இல்லை என அறிவித்துள்ளனர், மேலும் 6 பேர் தங்களது சொத்து மதிப்பு ரூ.10,000க்கும் குறைவாக இருப்பதாக கூறியுள்ளனர்.

ஏடிஆர் அறிக்கையின்படி பணக்கார வேட்பாளர் ஜெயந்தி படேலின் சொத்து மதிப்பு ரூ.233 கோடி என கூறியுள்ளது

கல்வித் தகுதியைப் பொறுத்தவரை, 42 விண்ணப்பதாரர்கள் தங்களைப் படிப்பறிவில்லாதவர்கள் என்றும், 85 பேர் "எழுத்தபடிக்க தெரியும்" என்றும், 5 முதல் 12ம் வகுப்பு வரை படித்துள்ளதாக 997 பேர் கூறியுள்ளனர். 449 பேர் பட்டதாரிகள்.

வயது விவரத்தைப் பற்றி தெரிவிக்கையில், 25-40 வயதிற்குட்பட்ட பிரிவில் 561 பேர், 861 பேர் 41-60 வயதுடையவர்கள், 197 பேர் 61-80 வயதுக்கு இடைப்பட்டவர்கள், இரண்டு வேட்பாளர்கள்  80 வயதுக்கு மேற்பட்டவர்கள்  என ADR அறிக்கை கூறுகிறது.

Tags:    

Similar News