வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது ஜி.எஸ்.எல்.வி. எஃப்.10
பூமி கண்காணிப்பு செயற்கைக்கோளுடன் 'ஜி.எஸ்.எல்.வி., எஃப்-10' ராக்கெட் இன்று வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது;
"இயற்கை பேரழிவுகள், விவசாயம், வனவியல், கனிமவியல், பேரிடர் எச்சரிக்கை, ஆகியவற்றை அறிந்து கொள்வதற்காக 'ஈஓஎஸ்-03' (EOS-3) என்ற பூமி கண்காணிப்பு செயற்கைகோளை இஸ்ரோ வடிவமைத்தது.
2,268 கிலோ எடை கொண்ட இந்த செயற்கைகோள் 'ஜி.எஸ்.எல்.வி. எஃப்-10' ராக்கெட்டில் பொருத்தப்பட்டு இன்று அதிகாலை 5.43 மணிக்கு, ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து, வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.
ராக்கெட் திட்டமிட்ட பாதையில் பயணிப்பதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.