ராய்பூர் விமான நிலையத்தில் ஹெலிகாப்டர் விபத்து: 2 விமானிகள் உயிரிழப்பு

ராய்பூர் விமான நிலையத்தில் வியாழக்கிழமை இரவு அரசு ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் இரண்டு விமானிகள் உயிரிழந்தனர்.

Update: 2022-05-12 17:30 GMT

ராய்பூர் விமான நிலையத்தில் வியாழக்கிழமை இரவு ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் இரண்டு விமானிகள் உயிரிழந்தனர்.

சத்தீஸ்கர் மாநிலம் ராய்பூரில் உள்ள சுவாமி விவேகானந்தர் விமான நிலையத்தில் வியாழக்கிழமை இரவு ஓடுபாதையில் அரசு ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியதில் இரண்டு விமானிகள் உயிரிழந்தனர்.

உயிரிழந்தவர்கள் விமானிகள் கேப்டன் பாண்டா மற்றும் கேப்டன் ஸ்ரீவஸ்தவா என அடையாளம் காணப்பட்டுள்ளனர். ஒருவர் சம்பவ இடத்திலேயே இறந்தார், மற்றவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார் என்று வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சோதனை ஓட்டத்தின் போது நடந்த இந்த விபத்தில் ஹெலிகாப்டர் முற்றிலும் சேதமடைந்தது.

சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகேல் தனது இரங்கல் செய்தியில், "ராய்ப்பூரில் உள்ள விமான நிலையத்தில் மாநில ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது பற்றிய வருத்தமான செய்தி கிடைத்தது. இந்த சோகமான விபத்தில், நமது விமானிகள் கேப்டன் பாண்டா மற்றும் கேப்டன் ஸ்ரீவஸ்தவா இருவரும் துரதிர்ஷ்டவசமாக இறந்தனர். கடவுள் அவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு வலிமையையும் அமைதியையும் தரட்டும்" என கூறியுள்ளார்

Tags:    

Similar News