மத்திய அரசின் பதினாறாவது நிதிக் குழு அமைப்பு
டாக்டர் அரவிந்த் பனகாரியாவைத் தலைவராகக் கொண்டு பதினாறாவது நிதிக்குழுவை மத்திய அரசு அமைத்துள்ளது.;
இந்திய அரசமைப்புச் சட்டத்தின் 280 (1) பிரிவின்படி, குடியரசுத்தலைவரின் ஒப்புதலுடன், பதினாறாவது நிதிக் குழுவை மத்திய அரசு அமைத்துள்ளது.
நித்தி ஆயோகின் முன்னாள் துணைத் தலைவரும், கொலம்பியா பல்கலைக்கழக பேராசிரியருமான டாக்டர் அரவிந்த் பனகாரியா இதன் தலைவராக இருப்பார். பதினாறாவது நிதிக்குழு உறுப்பினர்கள் நியமனம் பற்றி பின்னர் அறிவிக்கப்படும். நிதிக்குழுவின் செயலாளராக ரித்விக் ரஞ்சனம் பாண்டே நியமிக்கப்பட்டுள்ளார். இன்று (31-12-2023) வெளியிடப்பட்ட அறிவிப்பில் பதினாறாவது நிதிக்குழுவுக்கான விதிமுறைகளும் இடம்பெற்றுள்ளன.
பதினாறாவது நிதிக்குழுவின் அம்சங்கள் தொடர்பாக வழங்கும் பரிந்துரைகள்: -
(1) அரசமைப்புச் சட்டத்தின் அத்தியாயம் 1, பகுதி 12-ன் கீழ் பிரிக்கப்பட வேண்டிய வரிகளின் நிகர வருவாயை மத்திய அரசுக்கும் மாநிலங்களுக்கும் இடையே பகிர்ந்தளித்தல் மற்றும் அத்தகைய வருவாயில் அந்தந்த பங்குகளை மாநிலங்களுக்கு இடையே ஒதுக்கீடு செய்தல்;
(2) இந்திய ஒருங்கிணைந்த நிதியிலிருந்து மாநிலங்களின் வருவாயை மானியமாக வழங்குவது மற்றும் அரசமைப்புச் சட்டத்தின் 275 வது பிரிவின் கீழ் மாநிலங்களுக்கு அவற்றின் வருவாயின் உதவி மானியமாக வழங்கப்பட வேண்டிய தொகைகளை அந்த சட்டப்பிரிவு (1)-ன் விதிகளில் குறிப்பிடப்பட்டுள்ளவற்றைத் தாண்டி வேறு நோக்கங்களுக்காக நிர்வகிக்க வேண்டிய கொள்கைகள்;
(3) மாநில நிதிக்குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில் மாநிலத்தில் உள்ள ஊராட்சிகள் மற்றும் நகராட்சிகளின் நிதி ஆதாரங்களை மேம்படுத்துவதற்காக மாநில ஒருங்கிணைந்த நிதியை அதிகரிக்க தேவையான நடவடிக்கைகள்.
பதினாறாவது நிதிக்குழு, பேரிடர் மேலாண்மைச் சட்டம் -2005-ன் (2005-ன் 53) கீழ் அமைக்கப்பட்ட நிதி தொடர்பாக, பேரிடர் மேலாண்மை முன்முயற்சிகளுக்கு நிதியளிப்பதற்கான தற்போதைய ஏற்பாடுகளை மறுஆய்வு செய்து, அதன் மீது பொருத்தமான பரிந்துரைகளை வழங்கும்.
பதினாறாவது நிதிக்குழு 2026 ஏப்ரல் 1 ஆம் தேதி தொடங்கி 2025 அக்டோபர் 31 ஆம் தேதி வரையிலான ஐந்து ஆண்டு காலத்திற்கானதாகும்.