பதினாறாவது நிதிக்குழு உறுப்பினர்கள் 4 பேர் நியமனம்
பதினாறாவது நிதிக்குழு உறுப்பினர்களை மத்திய அரசு நியமித்துள்ளது.;
பதினாறாவது நிதிக்குழு உறுப்பினர்களை மத்திய அரசு நியமித்துள்ளது.
நித்தி ஆயோக் முன்னாள் தலைவர் அரவிந்த் பனகாரியாவை தலைவராகக் கொண்டு இன்று பதினாறாவது நிதிக்குழு அமைக்கப்பட்டுள்ளது.
குடியரசுத்தலைவரின் ஒப்புதலுடன் இக்குழுவின் உறுப்பினர்களாக
1.அஜய் நாராயண் ஜா, 15-வது நிதிக்குழு முன்னாள் உறுப்பினர் மற்றும் செலவினத்துறை முன்னாள் செயலாளர்-முழுநேர உறுப்பினர்,
2.அன்னி ஜார்ஜ் மேத்யூ, செலவினத்துறை முன்னாள் சிறப்புச் செயலாளர்- முழுநேர உறுப்பினர்
3. டாக்டர் நிரஞ்சன் ரஜதியக்ஷ, நிர்வாக இயக்குநர், அர்தா குளோபல்- முழுநேர உறுப்பினர்
4. டாக்டர் செளமியா காந்தி கோஷ், குழுமத் தலைமைப் பொருளாதார ஆலோசகர், பாரத ஸ்டேட் வங்கி- பகுதிநேர உறுப்பினர்
குழுவின் பரிந்துரை விதிமுறைகள் 31.12.2023 அன்று அறிவிக்கப்பட்டன.
2026, ஏப்ரல் 1 அன்று தொடங்கி ஐந்து ஆண்டுகளுக்கான பரிந்துரைகளை 2025 அக்டோபர் 31-க்குள் அளிக்குமாறு 16-வது நிதிக்குழு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
ஏலதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்பு
ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் தொழில்நுட்பக் கட்டமைப்புத் திட்டத்தின் ஒரு பகுதியாக ஒப்பந்த புள்ளிகளுக்கான நடைமுறைகளில் பங்கேற்க ஏலதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் இடைத்தரகர்கள் மூலம் ஒழுங்குமுறை, கண்காணிப்பு மற்றும் இணக்க நடைமுறை தொடர்பான அறிக்கைகளை சமர்ப்பித்தல், தரவுகள் மற்றும் அறிக்கைகளை ஆணையத்துடன் பகிர்ந்து கொள்வதுடன் துறை சார்ந்த மதிப்பாய்வு மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகளை எளிதாக்கும் வகையிலும், இந்த அமைப்பு செயல்படும்.
இத்தகைய செயல்பாடுகள் குறித்த அறிக்கைகள் மற்றும் குறிப்புகளை அளிக்கவும், இடைத்தரகர்கள் சமர்ப்பிக்கும் அறிக்கைகளை சரிபார்க்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் இது வகை செய்கிறது.
இந்த இரண்டாவது கட்ட செயல்திட்டம் கணினி ஒருங்கிணைப்பாளரைத் தேர்ந்தெடுக்க பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. தற்போது நடைமுறையில் உள்ள செயல்முறைகளை ஆய்வு செய்து அதனை மேம்படுத்துவதற்கான நடைமுறைகள், வடிவமைப்பு, மேம்பாடு, அமலாக்கம் மற்றும் பராமரிப்பு சேவைகளை வழங்குவது இந்தக் கணினி ஒருங்கிணைப்பாளரின் பொறுப்பாகும்.
இதில் தேர்ந்தெடுக்கப்படும் ஒப்பந்ததாரர் ஓய்வூதிய நிதி மற்றும் ஒழங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையத்தின் டிஜிட்டல் மயமாக்கல் நடவடிக்கைகளில் முக்கியப் பங்கு வகிப்பார்.
விருப்பமுள்ள தொழில்நுட்ப நிறுவனங்கள் இந்த ஏல நடைமுறைகளில் பங்கேற்பது குறித்த தகவல்களை அறிந்து கொள்வதற்கு ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையத்தின் இணையதளத்தில் (https://www.pfrda.org.in) அல்லது மத்திய பொதுக் கொள்முதல் இணையதளத்தில் (https://eprocure.gov.in/epublish/app) அறிந்து கொள்ளலாம்.
ஏலம் தொடர்பான விண்ணப்பங்களை 2024, மார்ச் 11 பிற்பகல் 3 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.
மேலும் தகவல் மற்றும் விளக்கங்களுக்கு, ஆர்வமுள்ள ஏலதாரர்கள் ஒப்பந்தப்புள்ளி ஆவணத்தில் குறிப்பிடப்பட்டுள்ள நியமிக்கப்பட்ட தகவல் தொடர்பு சேனல்கள் மூலம் இந்த ஆணையத்தைத் தொடர்பு கொள்ளலாம்.