நடுத்தர மக்களுக்கு இனிக்கும் செய்தி: தனிநபர் வருமான வரி உச்ச வரம்பு ரூ.7 லட்சமாக உயர்வு

நடுத்தர மக்களுக்கு இனிக்கும் செய்தியாக தனிநபர் வருமான வரி உச்ச வரம்பு ரூ.7 லட்சமாக உயர்த்ப்பட்டுள்ளாக மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது.

Update: 2023-02-01 07:14 GMT

தனிநபர் வருமான வரி உச்சவரம்பு ரூ.இரண்டரை  லட்சத்தில் இருந்து ரூ.7 லட்சமாக உயர்த்தப்பட்டு இருப்பது சம்பளதாரர்கள் மற்றும் நடுத்தர வர்க்க மக்களுக்கு இனிக்கும் செய்தியாக அமைந்துள்ளது.

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று காலை நாடாளுமன்ற மக்களவையில் பா.ஜ.க. அரசின் 2023- 24ம் ஆண்டிற்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.  இது அவர் ஐந்தாவது முறையாக தாக்கல் செய்துள்ள பட்ஜெட் ஆகும்.

இந்த பட்ஜெட்டில் தனிநபர் வருமான வரி உச்ச வரம்பு ரூ. இரண்டரை லட்சத்தில் இருந்து  ரூ.7 லட்சமாக உயர்த்துவதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். நிர்மலா சீதாராமன் இந்த அறிவிப்பை வெளியிட்டபோது நாடாளுமன்றத்தின் அனைத்து உறுப்பினர்களும் தட்டி வரவேற்றனர்.

இந்த அறிவிப்பின்படி இனி தனியார் மற்றும் அரசுநிறுவனங்களில் வேலை செய்யும் ஊழியர்கள் இனி வருடத்திற்கு ரூ.7 லட்சம்வரை சம்பளம் பெற்றால் அவர்கள் இனி ஐ.டி. எனப்படும் வருமான வரி செலுத்த  தேவை இல்லை. இந்த அறிவிப்பு நடுத்தர வர்க்க மக்களுக்கு இனிக்கும் செய்தியாக கருதப்படுகிறது.

இதுவரை இரண்டரை லட்சம் ரூபாய் வரை வருமான வரி கிடையாது. இரண்டரை லட்சம் முதல் ரூ. 5 லட்சம் வரை ஸ்லாப் முறையில் 10 முதல் 3௦ சதவீதம் வரை வருமான வரி விதிக்கப்பட்டு இருந்தது. இந்த ஸ்லாப் முறையில் இருந்து முற்றிலும் தற்போது விலக்கு அளிக்கப்பட்டு இருக்கிறது.

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 5 முக்கிய அறிவிப்புகளை அறிவித்துள்ளார். புதிய வரி விதிப்பின் கீழ் தள்ளுபடி வரம்பு ரூ.7 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. விலக்கு வரம்பு ரூ. 3 லட்சமாக உயர்த்தப்பட்டது

புதிய வரி முறையில் வரி விகிதங்கள்: 0 முதல் 3 லட்சம் வரை - NIL .3 லட்சம் முதல் 6 லட்சம் வரை - 5% 6 முதல் 9 லட்சம் வரை - 10% 9 முதல் 10 வரை - 15 லட்சத்திற்கு மேல் - 30%

Tags:    

Similar News