திருப்பதி மலைப்பாதையில், சிறுத்தை தாக்கி சிறுமி உயிரிழப்பு
girl died, attacked leopard, Tirupati mountain pass- திருப்பதி அலிபரி மலைப்பாதையில், சிறுத்தை தாக்கியதில் சிறுமி ஒருவர் உயிரிழந்தது, பக்தர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.;
girl died, attacked leopard, Tirupati mountain pass-- ஆந்திராவில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு தெலங்கானா, கேரளா, கர்நாடகா, தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு வெளி மாநிலங்களில் இருந்து தினசரி ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இதனால் பக்தர்கள் கூட்டத்தால் திருப்பதி கோயில் எப்போதும் நிரம்பி வழிந்தபடியே காட்சியளிக்கிறது. குறிப்பாக சனி, ஞாயிறு மற்றும் விடுமுறை தினங்களில் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து, ஏழுமலையானை தரிசனம் செய்து வருகின்றனர்.
இந்நிலையில், திருப்பதி மலைப்பாதையில் அவ்வப்போது சிறுத்தைகள் நடமாட்டம் அதிகரித்து வருவது பக்தர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக மலைப்பாதையில் பாதாயாத்திரையாக நடந்து வரும் பக்தர்களை, சிறுத்தைகள் அச்சுறுத்தி வருகின்றன.
கடந்த ஜூன் மாதம் 27-ம் தேதி, ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த ஒரு குடும்பத்தினர் அலிபிரி மலைப்பாதை வழியாக திருமலைக்கு நடந்து சென்றுகொண்டிருந்தனர். அப்போது இரவு, 10 மணியளவில், 7-வது மைல் அருகே, ஒரு சிறுத்தை சீறி வந்து கவுசிக் (3) எனும் சிறுவனை கவ்விக்கொண்டு ஒரு புதருக்குள் ஓடியது. இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த அந்த சிறுவனின் பெற்றோர் மற்றும் உறவினர் கூச்சலிட்டு கத்தியபடியே சிறுத்தையின் பின்னால் ஓடினர்.
அங்கு காவல் பணியில் இருந்த தேவஸ்தான கண்காணிப்பு படையினரும், சிறுத்தையை பின் தொடர்ந்து ஓடினர். இதனால் சிறுவனை கீழே போட்டு விட்டு சிறுத்தை தப்பி ஓடிவிட்டது. பின்னர் மீட்கப்பட்ட சிறுவனுக்கு, சிகிச்சை அளிக்கப்பட்டது. இதையடுத்து கூண்டு வைத்து, அந்த சிறுத்தை பிடிக்கப்பட்டது.
இந்நிலையில், ஆந்திராவைச் சேர்ந்த சின்னாரி என்பவர் குடும்பத்தினருடன், அலிபிரி மலைப்பாதை வழியாக திருமலைக்கு நடந்து சென்றுகொண்டிருந்தனர். இரவு, 8 மணியவில் சிறுத்தை ஒன்று திடீரென சீறி வந்து, லக்சிதா என்ற ஆறு வயது சிறுமியை பிடித்துக் கவ்விக்கொண்டு, காட்டுப்பகுதிக்குள் ஓடியது. இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அந்த சிறுமியின் பெற்றோர், உடனடியாக காவல் துறைக்கு தகவல் தெரிவித்தனர். ஆனால், இரவு நேரம் என்பதால் தேடுதல் பணிகளை மேற்கொள்ள முடியாத நிலையில் இன்று காலை போலீஸார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், லட்சுமி நரசிம்ம சுவாமி கோயில் அருகே அந்த சிறுமி, சடலமாக மீட்கப்பட்டாள். இது, பக்தர்களிடையே கடும் வேதவையை ஏற்படுத்தியது.
சிறுத்தை தாக்கியதில், சிறுமி உயிரிழந்தால் திருப்பதி மலைப்பாதை வழியாக திருமலை செல்லும் பக்தர்கள் அச்சமடைந்துள்ளனர். அலிபிரி மலைப்பாதையில் அவ்வப்போது சிறுத்தைகள் நடமாட்டம் அதிகிரித்து வருவது மலையேறி சுவாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்களிடையே பயத்தை அதிகரித்துள்ளது. பக்தர்களை அச்சுறுத்தி வரும் சிறுத்தையை பிடிக்கவும் பக்தர்கள் பயமின்றி மலையேறிச் செல்லவும் பாதுகாப்பு வசதிகளை தேவஸ்தான நிர்வாகம் ஏற்படுத்தி தர வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.