ஜெனரல் பிபின் ராவத்தின் இறுதிச்சடங்கு நாளை நடைபெறும்

ஜெனரல் பிபின் ராவத்தின் இறுதிச்சடங்கு நாளை நடைபெறுகிறது. நாடாளுமன்ற இரு அவைகளிலும், பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று விளக்கம் அளிக்கிறார்;

Update: 2021-12-09 04:19 GMT

பிபின் ராவத்

கோவை, சூலூரில் உள்ள விமானப்படை தளத்தில் இருந்து காலை 11.45 மணியளவில் ஹெலிகாப்டர் புறப்பட்ட சிறிது நேரத்தில் விபத்துக்குள்ளானது.

நேற்று நடந்த ஹெலிகாப்டர் விபத்தில், ராணுவ தலைமை தளபதி ஜெனரல் பிபின் ராவத் மற்றும் அவரது மனைவி மதுலிகா ராவத் உட்பட 13 பேர் உயிரிழந்த சம்பவம் குறித்து, பார்லிமென்டின்நாடாளுமன்ற இரு அவைகளிலும், பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று விளக்கம் அளிக்க உள்ளார்.

ஜெனரலுக்கு நாடு முழுவதும் இருந்தும் வெளிநாடுகளிலிருந்தும் அஞ்சலிகள் குவிந்த வண்ணம் உள்ளன..

ஜெனரல் ராவத் மற்றும் அவரது மனைவியின் இறுதிச்சடங்கு நாளை நடைபெறுகிறது. அவர்களது உடல்கள் இன்று மாலை ராணுவ விமானம் மூலம் டெல்லி வந்து சேரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags:    

Similar News