வீட்டுக் கிணற்றில் ஊற்றெடுக்கும் பெட்ரோல்.. வியப்பில் பொதுமக்கள்

திருவனந்தபுரம் அருகே வீடுகளின் கிணறுகளில் தண்ணீருக்குப் பதிலாக பெட்ரோல் ஊற்றெடுப்பது பொதுமக்கள் மத்தியில் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

Update: 2023-08-06 05:33 GMT

கேரள மாநில தலைநகரான திருவனந்தபுரம் அடுத்த வெஞ்ஞாறுமூடு ஆலந்தற பகுதியில் சுமார் 6 வீடுகளில் கிணற்று நீர் வித்தியாசமான சுவையுடன் இருந்து வந்துள்ளது.  இதனால் அந்த நீரை பயன்படுத்துவதை அப்பகுதி மக்கள்  தவிர்த்து வந்தனர். மேலும் வீட்டு உபயோகத்திற்கு குழாய் நீரையே பயன்படுத்தி வருகின்றனர்.

இந்தநிலையில், அப்பகுதியில் வசித்துவரும் சுகுமாரன் என்பவரது  வீட்டில் உள்ள கிணற்றில் தண்ணீருக்கு பதிலாக பெட்ரோல் ஊற்றெடுத்து வருகிறது.  இதனால் அப்பகுதி மக்கள் வியப்பில் ஆழ்ந்துள்ளனர்.

மேலும், சுகுமாரின் வீட்டின்லிருந்து 300 மீட்டர் தொலைவில் பெட்ரோல் நிலையம் ஒன்று அமைந்துள்ளது. இதனால் அங்குள்ள சேமிப்பு கிடங்கில் கசிவு ஏற்பட்டு நிலத்தடி நீர் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இதனையடுத்து புகார் தெரிவிக்கப்பட்டது.

புகாரை அடுத்து, அங்கு வந்த பெட்ரோல் நிலைய நிர்வாகிகள் அந்த கிணற்றை மூடியுள்ளனர். அத்துடன் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு கிணற்றில் தண்ணீருக்குப் பதில் பெட்ரோல் வருவது குறித்து ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

இதனைத்தொடர்ந்து அப்பகுதி மக்களுக்கு சொந்த செலவில் குடிநீர் விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இருந்த போதும், கிணற்றில் பெட்ரோல் ஊற்றெடுப்பது ஆபத்தை விளைவிக்கும் என்பதால், அதை தடுக்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Tags:    

Similar News