புதுதில்லி: கொரோனா தொற்று அதிகரிப்பால் தேசிய அருங்காட்சியகம் மூடல்

கொரோனா தொற்று வேகமாக பரவி வருவதால் புதுதில்லியில் உள்ள தேசிய அருங்காட்சியக அரங்குகள் நேற்று முதல் மூடப்பட்டன.;

Update: 2022-01-06 03:52 GMT

புதுதில்லியில் உள்ள தேசிய அருங்காட்சியகம், மத்திய அரசின் கலாச்சாரத்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படுகிறது.      கோவிட் -19 தொற்று பரவல் மீண்டும் அதிகரித்துள்ளதை முன்னிட்டு, தேசிய அருங்காட்சியகம் பார்வையாளர்களுக்கு நேற்று முதல் அடுத்த உத்தரவு வரை மூடப்படுவதாக தில்லி பேரிடர் மேலாண்மை சட்டத்தின் கீழ் தில்லி அரசு உத்தரவிட்டுள்ளது. ஆனால், தேசிய அருங்காட்சியகத்தின் அனைத்து துறைகளும், மத்திய அரசின் உத்தரவுப்படி திறந்திருக்கும். அங்கு கோவிட் தடுப்பு விதிமுறைகள் பின்பற்றப்படும் என கலாசாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Tags:    

Similar News