கோவிட் தொற்றில் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு நிதியுதவி
கோவிட் தொற்று காரணமாக பெற்றோர், பாதுகாவலரை இழந்த குழந்தைகளுக்கு பி எம் கேர்ஸ் திட்டத்தின் மூலம் நிதியுதவி;
கோவிட் தொற்று காரணமாக பெற்றோர், பாதுகாவலரை இழந்த குழந்தைகளுக்கு பி எம் கேர்ஸ் திட்டத்தின் மூலம் நிதியுதவி வழங்குவதற்கான நடைமுறைகளை பிரதமர் தொடங்கி வைத்தார். தமிழத்தில் இந்த திட்டத்தின் கீழ் 385 குழந்தைகள் பயடைகின்றனர்.
நிகழச்சியில் பேசிய பிரதமர், 18 முதல் 23 வயது வரையிலான பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு 23 வயதை அவர்கள் எட்டும்போது ஒரே தவணை உதவித்தொகையாக பத்து லட்சம் ரூபாய் வழங்கப்படும். மேலும் அக்குழந்தைகள் அன்றாட தேவைகளுக்காக அரசு சார்பில் மாதம் நான்காயிரம் ரூபாய் வழங்கப்படும். அவர்களது சுகாதார காப்பீட்டு அட்டை ஆரோக்கிய இந்தியா திட்டத்தின் மூலம் வழங்கப்படுவதாகவும் பிரதமர் கூறினார்.