முதல்வர் சித்தராமையா தலைமையில் கர்நாடகா அமைச்சரவை பட்டியல் முழு விவரம்
கர்நாடகாவில் காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் அமைச்சராக பொறுப்பேற்ற நிலையில், அவர்களுக்கான இலாகாக்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.
கர்நாடக மாநிலத்தில் அண்மையில் நடந்து முடிந்த தேர்தலில் பாஜகவை வீழ்த்தி காங்கிரஸ் கட்சி தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சியை கைப்பற்றியது. முதலமைச்சரை தேர்வு செய்யும் பணி கடும் இழுபறியில் நீடித்த நிலையில், ஏற்கனவே முதலமைச்சராக இருந்த சித்தரமையாவை காங்கிரஸ் மேலிடம் தேர்வு செய்தது.
இதையடுத்து கடந்த 20 ஆம் தேதி, சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் அரசு பதவியேற்றது. முதலமைச்சராக சித்தராமைய்யாவுக்கு ஆளுநர் தாவர்சந்த் கெலாட் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். தொடர்ந்து துணை முதலமைச்சராக டி.கே சிவக்குமார் பதவியேற்றார். மேலும், பரமேஷ்வரா, முனியப்பா, கே.ஜி.ஜார்ஜ், எம்.பி.பாட்டீல் , சதீஷ் ஜார்கோலி, பிரியங்க் கார்கே, ராமலிங்க ரெட்டி, ஜமீர் அகமது கான் ஆகியோர் அமைச்சர்களாக பதவியேற்றனர்.
இதையடுத்து கர்நாடக அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டு காங்கிரஸ் கட்சியின் 24 எம்எல்ஏக்கள், அமைச்சர்களாக பதவியேற்றுக் கொண்டனர். இந்நிலையில் கர்நாடக அமைச்சர்களுக்கான இலாகாக்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
ஒதுக்கீடு செய்யப்பட்ட இலாகாக்களின் விவரம் :
முதலமைச்சர் சித்தராமையா – நிதித்துறை, தொழிலாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தம், உளவுத்துறை, ஐடி,பிடி, உள்கட்டமைப்பு மேம்பாடு, தகவல் தொடர்புத் துறை
துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் – நீர்வளம், பெங்களூரு நகர்ப்புற வளர்ச்சி
பரமேஸ்வரா – உள்துறை
எச்.கே.பாட்டில் – சட்டம் மற்றும் நாடாளுமன்ற விவகாரத்துறை, சுற்றுலாத்துறை
கே.எச்.முனியப்பா – உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை
கே.ஜே.ஜார்ஜ் – மின்சாரத்துறை, எரிசக்தித்துறை
ராமலிங்க ரெட்டி – போக்குவரத்து துறை
எம்பி பாட்டில் – பெரிய, நடுத்தர தொழில்துறை
தினேஷ் குண்டுராவ் – சுகாதாரத்துறை
மகா தேவப்பா – சமூக நலத்துறை
சதீஷ் ஜார்கிஹோலி – பொதுப்பணித்துறை
கிருஷ்ணா பைரெகவுடா – வருவாய்துறை
பிரியங்க் கார்கே – நகர்ப்புற வளர்ச்சித்துறை
சிவானந்த் பாட்டில் – ஜவுளித்துறை
ஜமீர் அகமது காந்த் – வீட்டு வசதி மற்றும் சிறுபான்மை நலத்துறை
மது பங்காரப்பா – ஆரம்ப மற்றும் இடைநிலை கல்வித்துறை
எம்.சி.சுதாகர் – உயர்கல்வித்துறை
ஷரனா பசப்பா – சிறு குறு தொழில்துறை
ஈஸ்வர் கண்ட்ரே – வனத்துறை
செலுவராயசாமி – வேளாண் துறை
ரஹீம் காந்த் – நகராட்சி நிர்வாகம் மற்றும் ஹஜ் துறை