ஒலிம்பிக் பதக்கம் வென்றவர்களுக்கு இலவச விமான பயணம்

ஒலிம்பிக்கில் பதக்கம் வென்றவர்களுக்கு வாழ்நாள் முழுவதும் இலவச விமானப் பயணத்தை வழங்குவதாக ஸ்டார் ஏர் அறிவித்துள்ளது;

Update: 2021-08-09 02:18 GMT

இந்த ஆண்டு ஒலிம்பிக்கில் இந்தியா ஒரு தங்கம், இரண்டு வெள்ளி மற்றும் நான்கு வெண்கலப் பதக்கங்களை வென்றது.

ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா சனிக்கிழமையன்று ஒலிம்பிக்கில் அதிக தூரம் எறிந்து தனிநபர் தங்கத்தை வென்ற இரண்டாவது இந்தியர் என்ற பெருமையையும், முதல் தடகள பதக்கம் வென்றவராகவும் விளங்கினார்.

சோப்ரா சனிக்கிழமை தங்கப் பதக்கம் வென்ற பிறகு, இண்டிகோ அவருக்கு ஒரு வருடத்திற்கு வரம்பற்ற இலவச பயணத்தை வழங்குவதாக அறிவித்தது.

இந்தியாவின் ஸ்டார் ஏர் விமான நிறுவனம், ஒலிம்பிக்கில் பதக்கம் வென்றவர்களுக்கு வாழ்நாள் முழுவதும் இலவச விமானப் பயணத்தை வழங்குவதாக கூறியுள்ளது. கோ பர்ஸ்ட் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு அவர்களுக்கு இலவச டிக்கெட்டுகளை வழங்குவதாகக் கூறியது.

கோ ஃபர்ஸ்ட் ஒலிம்பிக்கில் இந்தியா வென்ற சிறந்த ஏழு பதக்கங்களைக் கொண்டாடுவதற்காக "அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு, 2025 வரை" அனைத்துப் பதக்கம் வென்றவர்களுக்கும் இலவச பயணத்தை வழங்குவதாகக் கூறியது.

ஏழு ஒலிம்பிக் பதக்கம் வென்ற மீராபாய் சானு (பளு தூக்குதல்), பி.வி.சிந்து (பேட்மிண்டன்), லவ்லினா போர்கோஹெய்ன் (குத்துச்சண்டை), ஆண்கள் ஹாக்கி அணி, ரவிக்குமார் தஹியா (மல்யுத்தம்), பஜ்ரங் புனியா (மல்யுத்தம்) மற்றும் தங்கப் பதக்கம் வென்ற நீரஜ் சோப்ரா (ஈட்டி எறிதல்) ஆகியோருக்கு அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு அனைத்து கோ ஃபர்ஸ்ட் விமானங்களிலும் இலவச பயணம் வழங்கப்படும், " என கோ ஃபர்ஸ்ட் குறிப்பிட்டது.

ஸ்டார் ஏர் நிறுவனம், நமது டோக்கியோ ஒலிம்பிக் சாம்பியன்களுக்கு வாழ்நாள் முழுவதும் இலவச விமானப் பயணத்தை வழங்குவதற்கு பெருமைப்படுகிறோம் என்று கூறியுள்ளது.

Tags:    

Similar News