சொத்துக்குவிப்பு வழக்கில் முன்னாள் முதல்வருக்கு 4 ஆண்டு சிறை

சொத்துக் குவிப்பு வழக்கில், ஹரியானா முன்னாள் முதல்வர் ஓம் பிரகாஷ் சவுதாலாவுக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து, டெல்லி நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

Update: 2022-05-27 14:00 GMT

ஓம் பிரகாஷ் சவுதாலா 

ஹரியானாவில், முதலமைச்சராக இருந்தவர், ஓம் பிரகாஷ் சவுதாலா. இவர், முன்னாள் துணை பிரதமர் தேவிலாலின் மகன். ஓம் பிரகாஷ் சவுதாலாவின் இந்திய தேசிய லோக்தளம் கட்சியின் ஆட்சி காலத்தில், 1993 ஆம் ஆண்டு முதல், 2006 ஆம் ஆண்டு வரை, முறைகேடாக ரூ.6.09 கோடி சொத்து சேர்த்ததாக, சவுதாலா மீது சிபிஐ வழக்கு பதிவு செய்தது.

இந்த வழக்கில், சவுதாலாவுக்கு எதிராக கடந்த 2010 மார்ச் 26ல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இவ்வழக்கில், சவுதாலா குற்றவாளி என்று, டெல்லியின் ரோஸ் அவென்யூ நீதிமன்றம்,கடந்த வாரம் தீர்ப்பு அளித்தது.

இந்த நிலையில், சவுதாலாவுக்கான தண்டனை விவரம் இன்று அறிவிக்கப்பட்டது. அதன்படி, ஓம் பிரகாஷ் சவுதலாவுக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சிபிஐ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ரூ. 50லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News