புதுச்சேரியில் கடற்கரைத் திருவிழா ஏப்.13-இல் தொடக்கம்
புதுச்சேரியில் முதல் முறையாக வருகிற 13-ஆம் தேதி முதல் 16-ஆம் தேதி வரை கடற்கரைத் திருவிழா நடைபெற உள்ளது.;
புதுவை கடற்கரை சாலையில் நடைபெற உள்ள "கடற்கறை திருவிழா" வை முன்னிட்டு வருகின்ற 13.04.2022 முதல் 16.04.2022 வரை நான்கு நாட்களுக்க போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
புதுச்சேரியில் முதல் முறையாக வருகிற 13-ஆம் தேதி முதல் 16-ஆம் தேதி வரை கடற்கரைத் திருவிழா நடைபெற உள்ளது.
அழகிய கடற்கரையுடன் நாட்டிலேயே சிறந்த சுற்றுலா நகரமாக புதுச்சேரி மாறியுள்ளது. கா்நாடகம், ஆந்திரம், தமிழகப் பகுதிகளிலிருந்து வார இறுதி நாள்களில் புதுச்சேரிக்கு சுற்றுலாப் பயணிகள் ஏராளமானோர் வருகின்றனா். இதனால், பல்வேறு சுற்றுலா உள்கட்டமைப்பு வசதிகள் கடந்த ஆண்டுகளில் சுற்றுலாத் துறையால் ஏற்படுத்தப்பட்டது.
குறிப்பாக, புதுச்சேரி வம்பாகீரப்பாளையம் பாண்டி மெரீனா கடற்கரை, புதுக்குப்பம் மணல்குன்று கடற்கரை, வீராம்பட்டினம் ரூபி கடற்கரை, சின்ன வீராம்பட்டினம் ஈடன் கடற்கரை எனப் புதிதாக கடற்கரைகள் மேம்படுத்தப்பட்டன.
கொரோனா தொற்றால் புதுவை மாநிலத்தின் சுற்றுலா வருவாய் குறைந்த நிலையில், அரசின் தீவிர முயற்சியால் அதை மீட்டெடுத்துள்ளது. புதுச்சேரியில் புதிதாக உருவாக்கப்பட்ட கடற்கரைகளை சுற்றுலாப் பயணிகளுக்கு அறிமுகப்படுத்தும் வகையில், சுற்றுலாத் துறை சார்பில் தமிழ்ப் புத்தாண்டையொட்டி வருகிற 13-ஆம் தேதி முதல் 16-ஆம் தேதி வரை கடற்கரைத் திருவிழா நடத்த உள்ளது
அதன்படி, புதுச்சேரி காந்தி சிலை கடற்கரை, பாண்டி மெரீனா கடற்கரை, நோணாங்குப்பம் சுண்ணாம்பாறு பேரடைஸ் கடற்கரை, காந்தி திடல் கைவினை அரங்கம் ஆகிய இடங்களில் கலை நிகழ்ச்சிகள், கடல்சார் விளையாட்டுகள், கடல் உணவு விற்பனை, மேலை நாட்டு இசை நிகழ்ச்சி, நாட்டுப்புற இசை, நடன நிகழ்ச்சி, கடல் சார்ந்த கருத்தரங்குகள், கட்டுமரப் படகுப் போட்டி, மிதிவண்டி மாரத்தான் போட்டி, கடற்கரை வாலிபால் போட்டி, பட்டம் விடும் நிகழ்ச்சி, மீன் உணவு தேடல், ஜிம்னாஸ்டிக், உறியடி, ஆடை அலங்கார அணிவகுப்பு நிகழ்ச்சி என தினமும் காலை 10 மணி முதல் இரவு 10 மணி வரை பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது
புதுச்சேரி கடற்கரையில் வருகிற 13-ஆம் தேதி மாலை நடைபெறும் நிகழ்வில் துணைநிலை ஆளுநா் (பொ) தமிழிசை சௌந்தரராஜன், முதல்வா் ரங்கசாமி ஆகியோர் விழாவைத் தொடக்கிவைப்பா். அமைச்சா்கள், எம்எல்ஏக்கள் பங்கேற்கவுள்ளனா்.
புதுச்சேரியில் முதல் முறையாக நடத்தப்படும் இந்தத் திருவிழா, இனி ஆண்டுதோறும் நடத்தப்படுமாம்.
புதுவை கடற்கரை சாலையில் நடைபெற உள்ள "கடற்கறை திருவிழா" வை முன்னிட்டு வருகின்ற 13.04.2022 முதல் 16.04.2022 வரை நான்கு நாட்களுக்க போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.