பெங்களூரு கொல்கத்தா ஹவுரா எக்ஸ்பிரஸ் ரயிலில் தீ விபத்து

பெங்களூருவில் இருந்து குப்பம் வழியாக கொல்கத்தா செல்லும் ஹவுரா எக்ஸ்பிரஸ் ரயிலில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.

Update: 2022-11-27 12:17 GMT

பெங்களூருவில் இருந்து கொல்கத்தா செல்லும் ஹவுரா எக்ஸ்பிரஸ் ரயிலின் பெட்டியில் தீ விபத்து ஏற்பட்டது.

ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் உள்ள குப்பம் ரயில் நிலையத்தில் ஹவுரா எக்ஸ்பிரஸ் ரயிலின் எஸ்9 ஏசி கோச்சில் தீ விபத்து ஏற்பட்டதை அடுத்து ரயில் நிறுத்தப்பட்டது.

தீ பரவுவதை இன்ஜின் பைலட் கவனித்து எச்சரிக்கை விடுத்ததை அடுத்து பயணிகள் ரயிலில் இருந்து இறங்கினர்


இந்திய ரயில்வேயின் கூற்றுப்படி, சர் எம் விஸ்வேஸ்வரய்யா டெர்மினல்-ஹவுரா துரந்தோ எக்ஸ்பிரஸ், சித்தூர் மாவட்டத்தில் (பெங்களூரு பிரிவு/SWR) குப்பம் நிலையத்தை நெருங்கும் போது, ​​ஒரு பெட்டியில் பிரேக் பிளாக் உராய்வு காரணமாக பிரேக் பிணைப்பு மற்றும் புகை ஏற்பட்டது. 

இந்த விபத்தில்  உயிர் சேதம் எதுவும் இல்லை, தீயணைப்புத் துறை அதிகாரிகள் தீயை அணைத்து வருகின்றனர். 

Tags:    

Similar News