பட்ஜெட் 2023 நேரடி அறிவிப்புகள்

Update: 2023-02-01 06:30 GMT
Live Updates - Page 4
2023-02-01 04:16 GMT

வருமானவரி  விலக்கு வரம்பை அரசாங்கம் உயர்த்த வாய்ப்புள்ளது. சம்பளம் பெறும் நடுத்தர வர்க்க வரி செலுத்துவோருக்கு மிகவும் தேவையான நிவாரணமாக, அடிப்படை வருமான வரி விலக்கு வரம்பை அரசாங்கம் அதிகரிக்கலாம்.

2023-02-01 04:13 GMT

டெல்லியில் குடியரசுத்தலைவர் திரௌபதி முர்முவை மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் சந்தித்து பேசினார். இன்று பட்ஜெட் தாக்கலாகும் நிலையில் நிதித்துறையின் முக்கிய அதிகாரிகளும் குடியரசுத்தலைவரை சந்தித்தனர். பிரதமர் தலைமையிலான கூட்டத்தில் பட்ஜெட்டுக்கு ஒப்புதல் பெறுகிறார் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன். 

2023-02-01 04:11 GMT

பட்ஜெட் 2023-24 நேரலை

பட்ஜெட் செய்தி நேரலை: 2023 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை இன்று தாக்கல் செய்ய நிதியமைச்சகத்திற்கு வந்தடைந்தார் நிர்மலா சீதாராமன்

Tags:    

Similar News