ஒருங்கிணைந்த பாதுகாப்பு சேவைகள் பணித் தேர்வு (I) 2021 இறுதி முடிவுகள் வெளியீடு
தேர்வு செய்யப்பட்ட விண்ணப்பதாரர்கள் தங்களது பிறப்பு, கல்வி தொடர்பான அசல் சான்றிதழ்களை, உரிய நகல்களுடன் அனுப்ப வேண்டும்;
இந்திய ராணுவம், கடற்படை மற்றும் விமானப்படைகளில் அதிகாரிகள் பதவிக்கான ஒருங்கிணைந்த பாதுகாப்பு சேவைகள் பணித்தேர்வு, மத்திய அரசு பணியாளர் தேர்வாணையத்தால் பிப்ரவரி 2021-ல் நடத்தப்பட்டது. அதன் தொடர்ச்சியாக பாதுகாப்பு அமைச்சகத்தின் படைப்பிரிவினர் தேர்வு வாரியத்தால் நடத்தப்பட்ட நேர்முகத் தேர்வில் தகுதியின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களின் விவரத்தை மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. இந்தத் தேர்வு முடிவுகளை யுபிஎஸ்சி-யின் இணையதளத்திலும் (http://www.upsc.gov.in) அறிந்து கொள்ளலாம்.
இதன்படி, டேராடூனில் உள்ள இந்திய ராணுவ பயிற்சி மையம், கேரள மாநிலம் எழிமலாவில் உள்ள இந்திய கடற்படைப் பயிற்சி மையம் மற்றும் ஐதராபாதில் உள்ள விமானப்படை பயிற்சி மையம் (பறக்கும் பயிற்சிக்கு முந்தைய பயிற்சி) ஆகியவற்றில் பயிற்சி பெற மொத்தம் 154 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
தேர்வு செய்யப்பட்ட விண்ணப்பதாரர்கள் தங்களது பிறப்பு / கல்வி தொடர்பான அசல் சான்றிதழ்களை, உரிய நகல்களுடன் அவர்களது விருப்பத்தேர்வின்படி சம்பந்தப்பட்ட பாதுகாப்புப் படையின் தலைமையகத்திற்கு அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.