தேர்தல் பத்திரத் திட்ட வழக்கில் உச்சநீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு
தேர்தல் பத்திரங்கள் தகவல் அறியும் உரிமையை மீறுவதாக உள்ளது என தலைமை நீதிபதி சந்திரசூட் கூறியுள்ளார்
தேர்தல் நிதிப் பத்திரங்கள் மூலம் அரசியல் கட்சிகள் நன்கொடை பெறும் முறைக்கு எதிரான வழக்குகள் மீது உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு இன்று தீர்ப்பு அளித்துள்ளது. தீர்ப்பில் தேர்தல் நிதி பத்திரம் திட்டத்தை ரத்து செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
அரசியல் கட்சிகளிக்கு அளிக்கப்படும் நன்கொடைகளில் வெளிப்படைத்தன்மையை கொண்டு வரும் வகையில், கடந்த 2018- ஜனவரி 2-ம் தேதி மத்திய அரசு தேர்தல் பத்திரங்கள் என்ற திட்டத்தை கொண்டுவந்தது. தேர்தல் பத்திரங்கள் மூலம் அரசியல் கட்சிகளுக்கு நிதி என்பது விஸ்வரூபம் எடுத்துள்ள பிரச்சனை. அரசியல் கட்சிகள் ரூ. 20,000க்கும் அதிகமாக ஒருவரிடம் நன்கொடை பெற்றால் அதன் முழு விவரத்தை தேர்தல் ஆணையத்திடம் வழங்க வகை செய்தது மக்கள் பிரதிநிதித்துவ சட்டம்.
ஆனால் 2018-ல் இந்த சட்டத்தில் ஒரு திருத்தம் கொண்டு வந்த மத்திய பாஜக அரசு, தேர்தல் பத்திரங்கள் மூலம் நன்கொடைகளை அரசியல் கட்சிகள் பெற்றால் தேர்தல் ஆணையத்திடம் தெரிவிக்க தேவை இல்லை என மாற்றிவிட்டது.
இந்த திருத்தத்துக்குப் பின்னர் அரசியல் கட்சிகள் தேர்தல் பத்திரங்கள் மூலம் பெருமளவு நன்கொடைகளைப் பெற்றன. ஒவ்வொரு அரசியல் கட்சியும் கார்ப்பரேட் நிறுவனங்களிடம் தேர்தல் பத்திரங்கள் மூலமாக பெருமளவு நன்கொடையை பெற்று குவித்தன.
இத்தகைய தேர்தல் பத்திரங்களை எஸ்.பி.ஐ. வங்கிதான் வெளியிடும். ரூ.1,000 முதல் ரூ1 கோடி வரையிலான பத்திரங்களை ஜனவரி, ஏப்ரல், ஜூலை, அக்டோபர் மாதங்களில் பெற்றுக் கொள்ளலாம். தேர்தல் காலத்தில் கூடுதலாக 30 நாட்கள் மத்திய அரசால் தேர்தல் பத்திரங்கள் விற்பனைக்கு அனுமதி வழங்கப்படும்.
இந்த திட்டத்தின் கீழ் அரசியல் கட்சிகளுக்கு நிதி அளிப்பவர்கள் பாரத ஸ்டேட் வங்கிக்கு சென்று ஆயிரம் ரூபாய் முதல் அதிகபட்சம் ரூ. 1 கோடி மதிப்பில் தேர்தல் பத்திரங்களை வாங்கிக் கொள்ள முடியும். தனி நபர்கள் நிறுவனங்கள் என தேர்தல் பத்திரங்களை வாங்கி தங்களுக்கு விருப்பமான அரசியல் கட்சிகளுக்கு நன்கொடையாக வழங்க முடியும்.
ஒரு நபர் அல்லது நிறுவனம் சார்பில் எத்தனை பத்திரங்களை வேண்டுமானாலும் வாங்கிக் கொள்ளலாம். தேர்தல் பத்திரங்களை வாங்கும் தனி நபர், நிறுவனங்கள் யார் என்ற விவரங்கள் பொது மக்களுக்கோ அல்லது நன்கொடையை பெறும் அரசியல் கட்சிக்கு அளிக்கப்படாது. எனினும், அரசு மற்றும் வங்கி சார்பில் இந்த விவரங்களை சேகரித்துக் கொள்ளலாம்.
தேர்தல் பத்திரங்கள் திட்டத்தில் வெளிப்படைத்தன்மை இல்லை என்றும் இதனை ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியும் உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த பின்னணியில் தேர்தல் பத்திரங்கள் என்பவை நிதி மசோதா சார்ந்தது; லோக்சபா ஒப்புதல் இல்லாமலேயே நிறைவேற்றப்பட்டது. இதன் அம்சங்கள், அரசியல் சாசனத்துக்கு எதிரானது எனக் கூறி உச்சநீதிமன்றத்தில் 2109-ல் பொதுநலன் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன.
இந்த வழக்குகளை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான பெஞ்ச் விசாரித்தது. இவற்றை தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான ஐந்து நீதிபதிகள் அடங்கிய அமர்வு விசாரித்து வந்தது.
கடந்த ஆண்டு நவம்பர் 2-ம் தேதி இந்த வழக்கின் தீர்ப்பு பின்னர் அறிவிக்கப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது இந்த நிலையில், தேர்தல் பத்திரங்கள் வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று தனது தீர்ப்பை வழங்கியது
தேர்தல் பத்திரங்கள் தகவல் அறியும் உரிமையை மீறுவதாக உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. தேர்தல் பத்திரங்கள் தகவல் அறியும் உரிமை, பிரிவு 19(1)(a) ஐ மீறுவதாக உச்ச நீதிமன்றம் தனது உத்தரவில் கூறியுள்ளது.
தலைமை நீதிபதி கூறுகையில், மனுக்கள் பின்வரும் சிக்கல்களை எழுப்புகின்றன (அ) சட்டப்பிரிவு 19(1)(a) இன் கீழ் திருத்தங்கள் தகவல் அறியும் உரிமையை மீறுகிறதா (ஆ) வரம்பற்ற நிறுவன நிதியானது சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தல் கொள்கைகளை மீறுகிறதா? 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு ஒருமனதாக முடிவெடுத்துள்ளதாக தலைமை நீதிபதி டிஒய் சந்திரசூட் தெரிவித்தார்.
நாங்கள் ஒருமனதாக ஒரு முடிவுக்கு வந்துள்ளோம். இரண்டு கருத்துகள் உள்ளன, ஒன்று எனது கருத்து , மற்றொன்று நீதிபதி சஞ்சீவ் கன்னா அவர்களுடையது. இருவரும் ஒரே முடிவுக்கு வந்துள்ளோம். தர்க்கத்தில் ஒரு சிறிய மாறுபாடு உள்ளது.
அரசியல் கட்சிகள் தேர்தல் செயல்பாட்டில் தொடர்புடைய அலகுகள். தேர்தல் தேர்வுகளுக்கு அரசியல் கட்சிகளின் நிதியுதவி பற்றிய தகவல்கள் அவசியம்.
பிரச்சினை 1- குடிமக்களுக்கு அரசாங்கத்தை கணக்கு வைக்க உரிமை உண்டு என்று நீதிமன்றங்கள் கூறியுள்ளன. தகவல் அறியும் உரிமையின் விரிவாக்கத்தின் முக்கிய அம்சம் என்னவென்றால், அது மாநில விவகாரங்களுடன் மட்டுப்படுத்தப்படாமல், பங்கேற்பு ஜனநாயகத்திற்குத் தேவையான தகவல்களையும் உள்ளடக்கியது.
கறுப்புப் பணத்தை ஒழிப்பதற்கான ஒரே திட்டம் தேர்தல் பத்திரங்கள் திட்டம் அல்ல. வேறு மாற்று வழிகளும் உள்ளன. கறுப்புப் பணத்தைக் கட்டுப்படுத்தும் நோக்கத்தில் தகவல் அறியும் உரிமை மீறல் நியாயப்படுத்தப்படவில்லை.
தேர்தல் பத்திரங்கள் திட்டம் அரசியலமைப்பிற்கு விரோதமானது என்று ரத்து செய்யப்பட வேண்டும். வருமான வரிச் சட்டத்தின் திருத்தங்கள் மற்றும் மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் பிரிவு 29C ஆகியவை தீவிர வைரஸ்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.
மத்திய அரசால் தேர்தல் திட்டத்தின் பிரிவு 7(4)(1) இல் ஏற்றுக்கொள்ளப்பட்ட நடவடிக்கையானது மிகக்குறைந்த கட்டுப்பாட்டு நடவடிக்கை என்பதை நிறுவ முடியவில்லை என தெரிவித்துள்ளனர்