இரண்டு பேர் வாக்களிக்க 107 கி.மீ., பயணித்த அதிகாரிகள்

மஹாராஷ்டிராவில் கரடுமுரடான பாதைகள் வழியாக 107 கி.மீ., பயணம் செய்து, மூத்த குடிமக்கள் இருவரது வாக்குகளை தேர்தல் அதிகாரிகள் பெற்று வந்துள்ளனர்

Update: 2024-04-13 05:05 GMT

மஹாராஷ்டிராவில் உள்ள 48 மக்களவை தொகுதிகளுக்கு வரும் 19, 26 ஆகிய தேதிகளிலும், அடுத்த மாதம் 7,13 மற்றும் 20ம் தேதிகளிலும் தேர்தல் நடக்கவுள்ளது.

முதல்கட்ட தேர்தல் வரும் 19ம் தேதி நடக்கவுள்ள தொகுதிகளில் அரசியல் கட்சிகள் தீவிர ஓட்டு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றன.

வாக்குச்சாவடிக்கு நேரில் வந்து வாக்களிக்க இயலாத 85 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள், மாற்றுத் திறனாளிகள், அத்தியாவசிய பணியில் ஈடுபடும் செய்தியாளர்கள் உள்ளிட்டோருக்கும் தபால் வாக்கு வசதி வழங்கப்பட்டுள்ளது. முதற்கட்ட தேர்தல் நடக்கவுள்ள தொகுதிகளில் 85 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடையவர்கள், மாற்றுத்திறனாளிகள் ஆகியோரின் வீடுகளுக்கே சென்று ஓட்டு சேகரிக்கும் பணியில் தேர்தல் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

கட்சிரோலியில் உள்ள மாவட்ட தகவல் அலுவலகத்தின்படி, தேர்தல் ஆணையம் 85 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் 40 சதவீதத்துக்கும் அதிகமான ஊனமுற்ற நபர்கள் வரவிருக்கும் பொதுத் தேர்தலில் வீட்டிலிருந்து வாக்களிக்க விருப்பம் அளித்துள்ளனர். 

கட்சிரோலி-சிமூர் தொகுதியில் 85 வயதுக்கு மேற்பட்ட 1,037 வாக்காளர்கள் மற்றும் 338 திவ்யாங்களின் வீட்டில் இருந்து வாக்களிக்கும் விண்ணப்பங்களுக்கு தேர்தல் அதிகாரிகள் ஒப்புதல் அளித்துள்ளனர்.

இதன்படி, கட்சிரோலி மாவட்டத்தில் உள்ள கட்சிரோலி - சிமூர் தொகுதியைச் சேர்ந்த 100 வயதான கிஷ்டய்யா மதர்போயினா மற்றும் கிஷ்டய்யா கொமேரா, 86, ஆகியோரின் வீடுகளுக்கு சென்று அவர்கள் வாக்குகளை அதிகாரிகள் பதிவு செய்துள்ளனர். 

புறநகர் பகுதியை ஒட்டிய சாலை வசதி இல்லாத இடத்தில் வசித்து வரும் அவர்களது ஓட்டுகள் கடும் சிரமத்துக்கு நடுவே சேகரிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு குடிமகனும் தங்கள் ஜனநாயகக் கடமையை நிறைவேற்ற தேர்தல் ஆணையம் உறுதுணையாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், 107 கி.மீ., கரடு முரடான சாலையிலும், மலைப் பாதையிலும் பயணம் செய்து அவர்களின் வாக்குகளை அதிகாரிகள் சேகரித்துள்ளனர்.

இதுவரை 1,205 வீட்டு வாக்காளர்கள் வாக்களித்துள்ளனர்.

Tags:    

Similar News