தேர்தல் பத்திரம் வழக்கு: எஸ்ஐடி விசாரணையை நிராகரித்த உச்ச நீதிமன்றம்

தேர்தல் பத்திரம் தொடர்பான வழக்கில் எஸ்ஐடி விசாரணையை உச்ச நீதிமன்றம் நிராகரித்து உள்ளது.

Update: 2024-08-02 11:00 GMT

தேர்தல் பத்திர திட்டம் குறித்துஎஸ்ஐடி விசாரணை தொடர்பான மனுவை உச்சநீதிமன்றம் நிராகரித்து உள்ளது.

நாடாளுமன்றத்திற்கு கடந்த ஏப்ரல்  மாதம் தேர்தல் தொடங்கஇருந்த நேரத்தில் அதற்கு முன்னதாக பிப்ரவரி மாதம்  அரசியல் கட்சிகள் பெற்ற நன்கொடைகள் தொடர்பான தேர்தல் பத்திரம் தொடர்பான மத்திய அரசின் நடவடிக்கைகள் அதற்கு எதிராக உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுகள் அரசியல் அரங்கில் மத்தியில் ஆளும் கட்சியாக உள்ள பாரதிய ஜனதாவிற்கு கடும் நெருக்கடியை கொடுத்தது.

தேர்தல் பத்திர திட்டம் என்பது அரசியல் கட்சிகளுக்கு அநாமதேய நிதியுதவிக்கான திட்டமாகும்.தேர்தல் பத்திரங்கள் மூலம் கார்ப்பரேட் நிறுவனங்கள் மற்றும் அரசியல் கட்சிகளுக்கு இடையேயான பரிவர்த்தனைகள் தொடர்பாக எஸ்ஐடி விசாரணை கோரிய மனுக்களை உச்ச நீதிமன்றம் நிராகரித்தது. இந்த ஆண்டு பிப்ரவரியில் உச்சநீதிமன்றம் தேர்தல் பத்திர திட்டத்தை ரத்து செய்தது. மேலும், ஸ்டேட் வங்கிக்கு தேர்தல் பத்திரங்கள் வழங்குவதை உடனடியாக நிறுத்தவும் உத்தரவிடப்பட்டது.

தேர்தல் பத்திர நன்கொடை வழக்கு மீதான முக்கிய விசாரணையை சுப்ரீம் கோர்ட் இன்று வெள்ளிக்கிழமை நடத்தியது. தேர்தல் பத்திரங்கள் மூலம் கார்ப்பரேட் நிறுவனங்கள் மற்றும் அரசியல் கட்சிகளுக்கு இடையேயான பரிவர்த்தனைகள் தொடர்பாக எஸ்ஐடி விசாரணை கோரிய மனுக்களை உச்ச நீதிமன்றம் நிராகரித்தது.

இந்த ஆண்டு பிப்ரவரியில், தேர்தல் பத்திர திட்டத்தை உச்ச நீதிமன்றம் ரத்து செய்தது. மேலும், ஸ்டேட் வங்கிக்கு தேர்தல் பத்திரங்கள் வழங்குவதை உடனடியாக நிறுத்தவும் உத்தரவிடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News