உ.பி.யில் டிராக்டர்-டிராலி விபத்தில் 8 குழந்தைகள் உட்பட 15 பேர் உயிரிழப்பு
உத்திரபிரதேசத்தின் காஸ்கஞ்சில் டிராக்டர்-டிராலி விபத்தில் 8 குழந்தைகள் உட்பட 15 பேர் உயிரிழந்துள்ளனர்.;
மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
உத்தரபிரதேசத்தின் காஸ்கஞ்ச் மாவட்டத்தில் கிராம மக்களை ஏற்றிச் சென்ற டிராக்டர்-டிராலி குளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் குறைந்தது 15 பேர் உயிரிழந்தனர். மக் பூர்ணிமாவின் புனிதமான சந்தர்ப்பத்தில் கங்கையில் புனித நீராடச் சென்ற கிராம மக்களில் பெரும்பாலும் பெண்கள் மற்றும் குழந்தைகள் இருந்தனர்.
விபத்தில் உயிரிழந்தோரில் எட்டு குழந்தைகள் மற்றும் ஏழு பெண்கள் உட்பட 15 பேர் இருப்பதை அலிகார் கோட்ட ஐஜி சலப் மாத்தூர் உறுதிப்படுத்தினார். மாத்தூர் கூறுகையில், சாலையில் கார் மீது மோதுவதைத் தவிர்க்க டிராக்டர் ஓட்டுனர் கட்டுப்பாட்டை இழந்ததால் இந்த விபத்து ஏற்பட்டது.
கிராம மக்களை ஏற்றிச் சென்ற டிராக்டர் டிராலி சேறு கலந்த நீர் நிரம்பிய குளத்தில் கவிழ்ந்தது.
உயிர் பிழைத்தவர்களை காஸ்கஞ்சில் உள்ள மாவட்ட மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரமும் நிவாரணம் அறிவித்துள்ளார்.
விபத்தில் காயமடைந்தவர்களுக்கு உடனடியாகவும், போதுமான சிகிச்சை அளிக்க காஸ்கஞ்ச் மாவட்ட அதிகாரிகளுக்கு முதல்வர் உத்தரவிட்டார். காஸ்கஞ்ச் மாவட்டத்தின் பட்டியாலி காவல் நிலையத்திற்கு உட்பட்ட இடத்தில் விரைவான மீட்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவும், உடனடி உதவிகளுக்கான வளங்களைத் திரட்டவும் அதிகாரிகளை வலியுறுத்தினார்.