குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக எகிப்து அதிபர் இந்தியா வருகை
இந்திய குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்க எகிப்து அதிபர் தனி விமானம் மூலம் இன்று டெல்லி வந்தடைந்தார்.
இந்தியாவின் 74வது குடியரசு தின விழா வரும் 26-ம் தேதி நாடு முழுவதும் கொண்டாடப்பட உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இந்தியாவின் 74வது குடியரசு தின விழாவில் தலைமை விருந்தினராக கலந்து கொள்வதற்காக எகிப்து அதிபர் அப்தெல் ஃபத்தா எல்-சிசி செவ்வாய்க்கிழமை புது தில்லி வந்தடைந்தார். இந்த பயணத்தின் போது, சிசி தனது இந்திய பிரதமர் திரௌபதி முர்மு, பிரதமர் மோடி மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் ஆகியோரை சந்திக்கிறார். குடியரசு தினத்திற்கு எகிப்து அதிபர் ஒருவர் சிறப்பு விருந்தினராக அழைக்கப்படுவது இதுவே முதல் முறை.
2022 அக்டோபரில் எகிப்துக்கு விஜயம் மேற்கொண்டிருந்த இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் மூலம் ரால் எகிப்து அதிபர் அல்-சிசிக்கு பிரதமர் நரேந்திர மோடி முறையான அழைப்பை அனுப்பியிருந்தார்.
குடியரசு தினத்தன்று டெல்லியில் முப்படைகளின் அணிவகுப்பு நடைபெற உள்ளது. குடியரசு தின விழாவின் முன் வரிசை இருக்கைகள் புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை கட்டிய தொழிலாளர்கள், சைக்கிள் ரிக்சா வண்டி இழுப்பவர்கள், சுமை தூக்குபவர்கள், காய்கறி விற்பவர்கள், பால் விற்பவர்கள் உள்பட சாதாரண மக்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இவர்கள் சிறப்பு அழைப்பாளர்களாக அழைக்கப்பட்டுள்ளனர்.
வழக்கமாக குடியரசு தின விழாவின் போது வெளிநாடுகளை சேர்ந்த முக்கிய தலைவர்கள் விழாவிற்கு சிறப்பு விருந்தினராக அழைக்கப்படுவர். அந்த வகையில் இந்த ஆண்டு நடைபெற உள்ள குடியரசு தின விழாவிற்கு எகிப்து அதிபர் அப்டெல் பதஹ் எல் சிசி சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், இந்திய குடியரசு தின விழாவில் பங்கேற்க எகிப்து அதிபர் எல் சிசி இன்று இந்தியா வந்துள்ளார். தனி விமானம் மூலம் டெல்லி வந்த அவரை அதிகாரிகள் வரவேற்றனர். இந்த வருகையின் போது குடியரசு தினவிழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்க உள்ள எகிப்து அதிபர் எல் சிசி இந்திய ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரதமர் மோடி, வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் உள்ளிட்டோரை சந்திக்கிறார்.
சிசி, 1954 இல் பிறந்தார், 1977 இல் எகிப்தின் இராணுவ அகாடமியில் பட்டம் பெற்றார் மற்றும் 1992 இல் இங்கிலாந்தில் உள்ள கூட்டு சேவைகள் கட்டளை மற்றும் பணியாளர் கல்லூரியில் கூடுதல் பயிற்சி பெற்றார்.
2014 ஆம் ஆண்டு முதல் எகிப்தின் அதிபராக பதவி வகித்து வரும் அப்தெல்-ஃபத்தா அல்-சிசி, குடியரசு தின விழாவிற்கு இந்தியாவினால் நடத்தப்படும் முதல் எகிப்திய தலைவர் ஆவார்.
68 வயதான அப்தெல்-ஃபத்தா அல்-சிசி, 2014 வரை எகிப்திய ராணுவத்தின் தலைமைத் தளபதியாக பணியாற்றி ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி ஆவார்.
ராணுவத்தில் இருந்து ஓய்வு பெறுவதற்கு முன்பு, சிசி 2013 முதல் 2014 வரை எகிப்தின் துணைப் பிரதமராகவும், 2012 முதல் 2013 வரை பாதுகாப்பு அமைச்சராகவும், 2010 முதல் 2012 வரை ராணுவ உளவுத்துறை இயக்குநராகவும் பணியாற்றினார்
2013ல் ராணுவ சதிப்புரட்சி மூலம் ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் அதிபரான முகமது மோர்சியை பதவியில் இருந்து நீக்கி 2014ல் சிசி அதிபரானார்.