தொற்று நோய் பரவலுக்கிடையே வாழ்க்கையை நடத்த மக்களுக்காக லாரியில் நகரும் உணவகம்

மூவிங் ரெஸ்டாரண்ட் மூலம் மக்களுக்கு இந்தோ - கான்டினென்டல் உணவு வகைகளை வழங்கி வருகிறார்

Update: 2021-06-03 04:17 GMT

மூவிங் ரெஸ்டாரண்ட்.. 

மேற்குவங்க மாநிலத்தில் கிழக்கு பர்த்வான் மாவட்டத்தில் வசித்து வருகிறார் பெர்த் மண்டல். இவர் ஹோட்டல் மேனேஜ்மென்ட்டில் பட்டம் பெற்ற பின் துபாயில் பணிபுரிந்து வந்தார். முன்னதாக பல 5 ஸ்டார் ஹோட்டல்களில் பணிபுரிந்தார்.

தொற்று நோய்க்கு மத்தியில் வாழ்க்கையை நடத்த சில வணிக யோசனைகளை செயல்படுத்த முடிவு செய்தார். இதன்படி 4 சக்கர லாரியில் ஒரு நகரும் உணவகத்தைஉருவாக்க திட்டமிட்டார் .

இதற்காக ரூ.20 லட்சம் செலவில் லாரி ஒன்றில் மூவிங் ரெஸ்டாரண்ட் உருவாக்கி உள்ளார். தனது இந்த மூவிங் ரெஸ்டாரண்ட் மூலம் மக்களுக்கு இந்தோ - கான்டினென்டல் உணவு வகைகளை வழங்குவதாக கூறினார். மேலும் வாடிக்கையாளர்களை ஈர்க்கும் வகையில் மாவட்டம் முழுவதும் இந்த மூவிங் ரெஸ்டாரண்ட் பயணிக்கிறது. லாரியின் முதல் தளத்தில் தேவையான அனைத்து உபகரணங்களுடனும் கூடிய கிச்சன் உள்ளது. வாடிக்கையாளர்கள் அமர்ந்து சாப்பிடும் இடம் கிச்சனுக்கு மேலே அமைக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்..


Tags:    

Similar News