ஜம்மு காஷ்மீரின் கத்ராவில் 3.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்

ஜம்மு காஷ்மீர் மாநிலம் கத்ராவில் இன்று அதிகாலை 3.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. சேதம் எதுவும் இல்லை

Update: 2023-02-17 03:46 GMT

கோப்புப்படம்

ஜம்மு காஷ்மீரின் கத்ராவில் வெள்ளிக்கிழமை அதிகாலை 3.6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக இந்தியாவின் நில அதிர்வுக்கான தேசிய மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கம் 10 கி.மீ ஆழத்தில் அதிகாலை 5.01 மணியளவில் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து அதிகாரிகள் தெரிவிக்கையில், ஜம்மு மற்றும் காஷ்மீர் தேசிய மையம் கத்ராவில் 97 கிமீ தொலைவில் இன்று காலை 5 மணிக்கு 3.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. எந்த இடத்திலிருந்தும் உயிரிழப்பு அல்லது சொத்து சேதம் ஏற்படவில்லை என்று தெரிவித்தனர்

கட்ராவில் இருந்து கிழக்கே 97 கிலோமீட்டர் தொலைவில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டிருந்தது. நிலநடுக்கத்தின் அட்சரேகை மற்றும் தீர்க்கரேகை முறையே 33.10 டிகிரி மற்றும் 75.97 டிகிரியாக காணப்பட்டது.

முன்னதாக பிப்ரவரி 13 அன்று, சிக்கிம் மாநிலத்தில் அதிகாலையில் நிலநடுக்கம் உணரப்பட்டது. நிலநடுக்கத்திற்கான தேசிய மையத்தின்படி, சிக்கிமில் உள்ள யுக்சோமில் அதிகாலை 4.15 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. அதன் தீவிரம் ரிக்டர் அளவுகோலில் 4.3 ஆக பதிவானது.

Tags:    

Similar News