மணிப்பூரை இன்று அதிர வைத்த நிலநடுக்கம்: 4.4 ரிக்டராக பதிவு
மணிப்பூரில் இன்று அதிகாலை 4.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் உணரப்பட்டது. இதனால் ஏற்பட்ட பாதிப்பு குறித்த தகவல் எதுவும் இல்லை.;
வடகிழக்கு மாநிலங்களில் சில நாட்களாக நிலநடுக்கம் உணரப்பட்டு வருகிறது. இதனிடையே மணிப்பூரில் இன்று காலை, மிதமான நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. இன்று காலை 7.45 மணியளவில், ரிக்டர் அளவில் 4.4- ஆக, இந்த நிலநடுக்கம் பதிவானதாக, அதிகாரிகள் தெரிவித்தனர்.
குறிப்பாக, மணிப்பூரின் உக்ருல் பகுதியில் நிலநடுக்கம் உணரப்பட்டது. இதனால், வீட்டில் இருந்த பொருட்கள் உருண்டன. எனினும், இதனால் சேதம் எதுவும் ஏற்பட்டதாக, இதுவரை தகவல் இல்லை.