வெளிநாட்டுப் பயணத்தின் போது இ-பாஸ்போர்ட்: பட்ஜெட்டில் அறிவிப்பு
வெளிநாட்டு பயணத்தின்போது பயணிகள் வசதிக்காக இ-பாஸ் போர்ட் முறை அறிமுகப்படுத்தப்படும் என நிதியமைச்சர் அறிவிப்பு;
வெளிநாடு செல்லும் பயணிகள் வசதிக்காக இ-பாஸ் போர்ட் முறை அறிமுகப்படுத்தப்படும் என மத்திய பட்ஜெட்டில் நிதியமைச்சர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
தற்போதைய சூழ்நிலையில் வெளிநாட்டு பயணங்கள் செல்வது குறைவாக இருந்தாலும், சர்வதேச பயணம் விரைவில் மீண்டு வர வாய்ப்புள்ளது. இ-பாஸ்போர்ட் போன்ற புதுமையான முயற்சிகளின் அறிமுகம், இமிக்ரேஷன் கவுண்டர்களில் நீண்ட வரிசைகளை குறைப்பதன் மூலம் பாதுகாப்பை அதிகரிப்பது மட்டுமல்லாது சர்வதேச பயணிகளின் வசதியை மேம்படுத்தும். தொற்றுநோயால் இயக்கப்படும் சூழலில் சர்வதேச பயணத்தின் விரைவான மறுமலர்ச்சிக்கு இது உதவும்.