திருப்பதி கோவிலில் துர்கா ஸ்டாலின் மற்றும் குடும்பத்தினர்
தமிழக முதல்வர் மனைவி துர்கா ஸ்டாலின் மற்றும் குடும்பத்தார் இன்று காலை விஐபி பிரேக் தரிசனத்தில் திருப்பதி கோவிலில் ஏழுமலையானை வழிபட்டனர்;
சாமி தரிசனத்திற்காக திருப்பதி மலைக்கு வந்திருந்த துர்கா ஸ்டாலின் மற்றும் அவருடைய குடும்பத்தார் இன்று காலை வி.ஐ.பி பிரேக் தரிசனம் மூலம் ஏழுமலையான் கோவிலுக்கு சென்றனர்.
தொடர்ந்து கோவிலில் ஏழுமலையானை வழிபட்ட அவர்களுக்கு தேவஸ்தானம் சார்பில் தீர்த்த பிரசாதங்கள்,சேஷ வஸ்திரம் ஆகியவை வழங்கப்பட்டன.