மண்டபம் அருகே ரூ.108 கோடி மதிப்பிலான போதைப்பொரட்கள் பறிமுதல்

மண்டபம் அருகே ரூ.108 கோடி மதிப்பிலான 99 கிலோ போதைப் பொருளை வருவாய் புலனாய்வுத் துறையினர் கைப்பற்றியதுடன் 4 பேரைக் கைது செய்தனர்.

Update: 2024-03-05 16:02 GMT

மண்டபம் அருகே ரூ.108 கோடி மதிப்பிலான 99 கிலோ போதைப் பொருளை வருவாய் புலனாய்வுத் துறையினர் கைப்பற்றினர்.

மண்டபம் அருகே ரூ.108 கோடி மதிப்பிலான 99 கிலோ போதைப் பொருளை வருவாய் புலனாய்வுத் துறையினர் கைப்பற்றியதுடன் 4 பேரைக் கைது செய்தனர்.

போதைப் பொருள் கடத்தலுக்கு எதிராக சென்னை வருவாய் புலனாய்வுத் துறையினர் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்தியாவில் இருந்து இலங்கைக்கு கடல் வழியாக போதைப் பொருள் கடத்தப்படுவதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், ராமநாதபுரம் மாவட்டம் மண்டபத்துக்கு அப்பால் மன்னார் வளைகுடாப் பகுதியில் வருவாய் புலனாய்வுத் துறை மற்றும் இந்திய கடலோரக் காவல்படை அதிகாரிகள் கண்காணிப்பு மற்றும் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

இந்தத் தேடுதல் வேட்டையின் போது, இன்று அதிகாலை இலங்கையை நோக்கி சென்று கொண்டிருந்த ஒரு நாட்டுப்படகை அதிகாரிகள் கண்டனர். படகை இடைமறித்து அதிகாரிகள் சோதனையிட்டதில், படகில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 5 சாக்குகளை கைப்பற்றினர். கடத்தலில் ஈடுபட்ட படகையும், அதிலிருந்த மூன்று பேரையும் மண்டபத்தில் உள்ள கடலோர காவல்படை அலுவலகத்திற்கு அழைத்துவந்து அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையின் போது, போதைப் பொருள் கடத்தியதை அந்த நபர்கள் ஒப்புக்கொண்டனர். பாம்பனைச் சேர்ந்த ஒருவர், தங்களிடம் இந்தப் போதைப் பொருளைக் கொடுத்து, நடுக்கடலில் வரும் இலங்கை நபர்களிடம் ஒப்படைத்து விடுமாறு கூறியதாகவும், அதன்படி போதைப் பொருளை எடுத்துச் சென்றதாகவும், பிடிபட்டவர்கள் தெரிவித்தனர்.

பிடிபட்டவர்கள் கூறிய தகவலின் அடிப்படையில் தீவிர நடவடிக்கை மேற்கொண்ட அதிகாரிகள், போதைப் பொருளை ஒப்படைத்த நபரை அவரது வீட்டிலேயே கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் போதைப் பொருள் கடத்துவதில் அவர் முக்கிய நபராக செயல்பட்டு வந்தது தெரியவந்தது. கடல் வழியாக போதைப் பொருளை இலங்கைக்கு கடத்திச் சென்றதாக அவர் கூறினார். பிடிபட்ட போதைப் பொருள் நாட்டின் பல பகுதிகளிலிருந்து கொண்டுவரப்பட்டதாக பூர்வாங்க விசாரணையில் தெரியவந்தது.

பிடிபட்ட சாக்குகளில் இருந்து 99 கிலோ எடை கொண்ட 111 பாக்கெட்டுகள் கைப்பற்றப்பட்டன. அதில் ஹாஷிஷ் என்கிற போதைப் பொருள் என்பது சோதனையில் கண்டுபிடிக்கப்பட்டது. சர்வதேச சந்தையில் அதன் மதிப்பு ரூ.108 கோடியாகும். கைது செய்யப்பட்ட நான்கு பேரிடமும் மேல் விசாரணை நடைபெற்று வருகிறது.

கோவா கடற்படை போர்க் கல்லூரியில் பயிற்சி கட்டிடம் திறப்பு

கோவா கடற்படை போர்க் கல்லூரியில் புதிய நிர்வாக மற்றும் பயிற்சி கட்டிடத்தை பாதுகாப்புத் துறை அமைச்சர்  ராஜ்நாத் சிங் திறந்து வைத்தார்.

கோவா கடற்படை போர்க் கல்லூரியில் புதிய நிர்வாக மற்றும் பயிற்சி கட்டிடத்தை 2024 மார்ச் 5 அன்று பாதுகாப்புத் துறை அமைச்சர்  ராஜ்நாத் சிங் திறந்து வைத்தார். இந்த நவீன கட்டிடத்திற்கு பழங்கால இந்தியாவின் சோழ வம்சத்தின் வலிமைமிக்க கடல்சார் ஆட்சிக்கு மரியாதை செலுத்தும் வகையில், சோழா என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.

இந்த நிகழ்ச்சியில் பேசிய பாதுகாப்புத் துறை அமைச்சர், உலகத் தரம் வாய்ந்த பயிற்சி வசதிகளுடன் இந்தியாவின் கடல்சார் வலிமையை எடுத்துக்காட்டும் வகையில், கட்டிடத்தை அமைத்ததற்காக கடற்படையைப் பாராட்டுவதாகக் குறிப்பிட்டார்.

இந்தியாவின் கடல்சார் திறன் மற்றும் கடற்படையின் சின்னமாக இந்த சோழா கட்டிடம் திகழ்கிறது என்று அவர் கூறினார். அடிமை மனப்பான்மையில் இருந்து விடுபட வேண்டும் என்ற இந்தியாவின் புதிய மனநிலையின் பிரதிபலிப்பாகவும், நமது செழுமைமிக்க வரலாற்று பாரம்பரியம் குறித்து பெருமிதம் கொள்வதாகவும் இக்கட்டிடம் அமைந்துள்ளதாக அவர் தெரிவித்தார். இந்தியப் பெருங்கடல் பகுதியில் நாடுகளின் தன்னாட்சியையும், இறையாண்மையையும் இந்தியா பாதுகாப்பதாக அவர் கூறினார்.

இந்தியாவின் வளரும் சக்தி ஆதிக்கம் செலுத்துவதற்காக அல்லாமல், இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் அமைதியையும், வளமையையும் உருவாக்குவதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது என்று ராஜ்நாத் சிங் குறிப்பிட்டார்.

Tags:    

Similar News