குடியரசுதின விழா அணிவகுப்பில் டிஆர்டிஓவின் 2 அலங்கார ஊர்திகள் பங்கேற்பு

Update: 2022-01-22 17:01 GMT

தில்லியில் ஜனவரி 26ம் தேதி நடைபெறும் குடியரசு தினவிழா அணிவகுப்பில் ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம்(டிஆர்டிஓ) சார்பில் இரண்டு அலங்கார ஊர்திகள் பங்கேற்கின்றன. இதில் டிஆர்டிஓ தயாரித்த தேஜஸ் இலகு ரக போர் விமானங்களுக்கான சென்சார்கள், ஏவுகணைகள், எலக்ட்ரானிக் கருவிகள், நீர்மூழ்கி கப்பல்களுக்கான இயந்திரங்கள் இடம் பெறுகின்றன.

முதல் அலங்கார ஊர்தியில், தேஜஸ் போர் விமானத்துக்கென உள்நாட்டில் உருவாக்கப்பட்ட நவீன எலக்ட்ரானிக் ரேடார் 'உத்தம்' , 'அஸ்த்ரா', 'ருத்ரம்' என்ற ஏவுகணைகள் உட்பட 5 வகையான ஆயுதங்கள், ஜாமர் கருவி ஆகியவை இடம் பெறுகின்றன. தரை இலக்குகளை தாக்கும் 'கவுரவ்' என்ற ஆயுதம் இதில் இடம் பெறுகிறது. இந்த ஆயுதங்கள் ஐதராபாத்தில் உள்ள டிஆர்டிஓ ஆய்வு கூடங்களில் தயாரிக்கப்பட்டன.

இரண்டாவது அலங்கார ஊர்தியில், நீர்மூழ்கி கப்பல்களை இயக்க பயன்படும் காற்று தேவையில்லாத எந்திர அமைப்பு-ஏஐபி சிஸ்டம் இடம் பெறுகிறது. எரிபொருள் செல் தொழில்நுட்பத்துடன் கூடிய ஹைட்ரஜன் ஜெனரேட்டர். டீசல்-எலக்ட்ரிக் சக்தி ஆகியவற்றின் மூலம் இயங்கும் நீர்மூழ்கி கப்பல்களுடன் ஒப்பிடுகையில், இந்த ஏஐபி இயந்திரம், நீர்மூழ்கி கப்பலை தண்ணீருக்கு அடியில் அதிக நேரம் செயல்பட உதவுகிறது.. இந்த வகைத் தொழில்நுட்பம் உலகில் ஒரு சில நாடுகளில் மட்டுமே உள்ளது. உயர் கல்விநிறுவனங்கள் மற்றும் தொழில்துறையினருடன் இணைந்து இந்த தொழில்நுட்பத்தை டிஆர்டிஓ உருவாக்கியுள்ளது.

Tags:    

Similar News