டிஜிட்டல் சுகாதாரம்: நிபுணர்களின் ஆலோசனையைப் பயனாளிகள் நேரடியாக பெற MyCGHS அறிமுகம்
பெருந்தொற்றின் போது டிஜிட்டல் ஊடகப் பயன்பாடுகளை புரிந்துகொண்டதன் விளைவாக இது உருவாக்கப்பட்டுள்ளது. -பாரதி பிரவீன் பவார்;
மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலம் அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா
புதுப்பிக்கப்பட்ட மத்திய அரசு சுகாதாரத் திட்ட இணையதளம் (www.cghs.gov.in) மற்றும் "MyCGHS" கைபேசிச் செயலியை மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலம் அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா டிஜிட்டல் முறையில் இன்று அறிமுகப்படுத்தினார். மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலம் இணை அமைச்சர் டாக்டர் பாரதி பிரவீன் பவார் உடனிருந்தார்.
"கைபேசிச் செயலியுடன் இணைக்கப்பட்ட புதுப்பிக்கப்பட்ட மத்திய அரசு சுகாதாரத் திட்ட இணையதளம் தொடங்கி வைக்கப்பட்டது. முக்கியமான மற்றும் சரியான நேரத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கையாகும். மேம்படுத்தப்பட்ட பல அம்சங்களை இந்த இணையதளம் கொண்டுள்ளது, 40 லட்சத்திற்கும் அதிகமான பயனாளிகளுக்கு இது பலனளிக்கும்," என்று நிகழ்ச்ச்சியில் பேசிய அமைச்சர் கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், தற்போதைய கொவிட் பெருந்தொற்றின் போது எடுக்கப்பட்ட புதுமையான நடவடிக்கை இது என்றும் இதன் மூலம் வெளியில் செல்லாமல் மருத்துவ சேவைகளைப் பெறலாம் என்றும் கூறினார்.
புதுப்பிக்கப்பட்ட இணையத்தளத்தில் சேவைகள் விரிவுபடுத்தப்பட்டுள்ளதாகச் சுகாதார அமைச்சர் மேலும் தெரிவித்தார். புதிதாக வழங்கப்பட்டுள்ள தொலை-ஆலோசனை அம்சத்துடன், நிபுணர்களின் ஆலோசனையைப் பயனாளிகள் நேரடியாகப் பெறலாம் என்று அவர் கூறினார்.
இந்தச் சாதனை குறித்து தமது மகிழ்ச்சியை வெளிப்படுத்திய டாக்டர் பாரதி பிரவீன் பவார், "பெருந்தொற்றின் போது டிஜிட்டல் ஊடகப் பயன்பாடுகளை நாங்கள் புரிந்துகொண்டதன் விளைவாக இது உருவாக்கப்பட்டுள்ளது. டிஜிட்டல் சுகாதார இயக்கத்திற்கு ஏற்ப பயனாளிகள் பலன்களைப் பெறுவதற்காக இந்தப் புதிய இணையதளம் தொடங்கப்பட்டுள்ளது" என்றார்.
"எதிர்காலத்தில், 40 லட்சம் பயனாளிகளுக்கு உடல்நலம் தொடர்பான தகவல்களை வழங்க இந்த தளம் பயனுள்ளதாக இருக்கும்," என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.