நமது நாட்டு தேசிய கீதத்தின் தமிழாக்கம் என்ன என தெரியுமா?

Anthem Meaning in Tamil-நமது நாட்டு தேசிய கீதத்தின் தமிழாக்கம் என்ன என தெரிய வேண்டுமானால் தொடர்ந்து படியுங்கள்.;

Update: 2023-02-21 11:31 GMT

Anthem Meaning in Tamil

Anthem Meaning in Tamil-சன கண மன அதிநாயக செய கே

பாரத பாக்கிய விதாதா.

பஞ்சாப சிந்து குசராத்த மராட்டா

திராவிட உத்கல வங்கா.

விந்திய இமாச்சல யமுனா கங்கா

உச்சல சலதி தரங்கா.

தவ சுப நாமே சாகே,

தவ சுப ஆசிச மாகே,

காகே தவ செய காதா.

சன கண மங்கள தாயக செயகே

பாரத பாக்கிய விதாதா.

செய கே, செய கே, செய கே,

செய செய செய, செய கே.

தேசிய கீதம்

national anthem in tamilஇது நமது பாரத திருநாட்டின் தேசிய கீதம் என்பது நாம் அனைவருக்கும் தெரியும். பள்ளி கல்லூரிகளில் நாம் தினமும் இதனை படித்து விட்டு தான் வெளியே வந்திருக்கிறோம். மத்திய, மாநில அரசு விழாக்கள் அனைத்திலும் தேசிய கீதம் ஒலிக்கப்படுகிறது. 

என்ன அர்த்தம்

national anthem in tamilதேசிய கீதம் ஒலிக்கும்போது எல்லாம் நாமும் தெரிந்தோ தெரியாமலோ வாயசைத்துவிட்டு வந்து விடுகிறோம். ஆனால் தேசிய கீதத்தில் உள்ள ஒவ்வொரு வார்த்தை மற்றும் வாக்கியத்திற்கும் நம் தாய்மொழியான தமிழில் என்ன அர்த்தம் என்பது நம்மில் பலருக்கு தெரிந்திருக்க வாய்ப்பு இல்லை.

தேசிய கீதத்தின் தமிழாக்கம்

எனவே நமது தேசிய கீதத்தின் தமிழாக்கம் என்ன என்பதை நாம் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய ஒன்றாகும். தமிழக அரசின் அதிகாரப்பூர்வ மொழி பெயர்ப்பான இது அரசு பாடநூல்களில் பயன்படுத்தப்படுகின்றது.

இனி தேசிய கீதத்தின் தமிழாக்கத்தை பார்ப்போம்.

இந்தியத் தாயே! மக்களின் இன்ப துன்பங்களைக் கணிக்கின்ற

நீயே எல்லாருடைய மனத்திலும் ஆட்சி செய்கிறாய்.

நின் திருப்பெயர் பஞ்சாபையும், சிந்துவையும், கூர்ச்சரத்தையும்

மராட்டியத்தையும், திராவிடத்தையும், ஒரிசாவையும்.

வங்காளத்தையும், உள்ளக் கிளர்ச்சி அடையச் செய்கிறது.

நின் திருப்பெயர் விந்திய, இமய மலைத் தொடர்களில்

எதிரொலிக்கிறது; யமுனை, கங்கை ஆறுகளின்

இன்னொலியில் ஒன்றுகிறது; இந்தியக் கடலலைகளால்

வணங்கப்படுகிறது.

அவை நின்னருளை வேண்டுகின்றன; நின் புகழைப் பரப்புகின்றன.

இந்தியாவின் இன்ப துன்பங்களைக் கணிக்கின்ற தாயே. உனக்கு

வெற்றி! வெற்றி! வெற்றி!

தேசிய கீதத்தின் வரலாறு

national anthem in tamilநமது தேசிய கீதத்தை இயற்றியது ரவீந்திரநாத் தாகூர். வங்காள மொழியில் அவர் இயற்றிய இந்த பாடல் 1911-ம் ஆண்டு டிசம்பர் 27-ம் தேதிதான் முதன்முதலாக கல்கத்தா நகரில் இந்திய தேசிய காங்கிரஸ் மாநாடு நடக்கும்போது இப் பாடல் பாடப்பட்டது. ரவீந்திர நாத் தாகூரின் உறவினரான சரளாதேவி சௌதுராணி என்பவர் அப்போது இந்தப் பாடலைப் பாடினார்.

national anthem in tamil1950 ஆம் ஆண்டு சனவரி 24 ம்தேதி தான் "சன கன மண' இந்தியாவின் தேசிய கீதமாகவும், "வந்தேமாதரம்' தேசியப் பாடலாகவும் இந்தியாவின் முதல் குடியரசுத் தலைவர் டாக்டர் இராசேந்திர பிரசாத்தால் அறிவிக்கப்பட்டது.

பாடும் முறை

national anthem in tamilநமது நாட்டின் தேசிய கீதத்தை ஒருநிமிடத்திற்கு மேல் பாடக்கூடாது. தேசிய கீதம் பாடும்போது ஆடாமல் அசையாமல் தலைநிமிர்ந்து நிற்கவேண்டும். இந்தியாவில் சகல விதமான அரசு நிகழ்ச்சிகளின் இறுதியில் இப்பாடல் பாடப்பெற்று இந்தியர்கள் அனைவரும் எழுந்து நின்று அசையாமல் மரியாதை செலுத்தும் வழக்கம் உள்ளது.

தியேட்டர்களில் தேசிய கீதம்

national anthem in tamilதேசிய கீதம் அறிமுகமான காலத்தில் அனைத்திந்திய வானொலியின் அன்றாட நிகழ்ச்சிகளின் இறுதியில் இப்பாடல் ஒலிபரப்பப்பட்டது. திரையரங்குகளில் திரைப்படத்தின் முடிவில் தேசியக்கொடி திரையிலும், தேசிய கீதம் ஒலியிலும் வந்தன. திரையரங்கில் உள்ள மக்கள் எழுந்து நின்று மரியாதை செய்தனர். தற்காலத்தில் இந்நடைமுறை அமலில்  இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.



அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags:    

Similar News