மகாராஷ்டிரா ஆளுனரை விரைவில் சந்திக்க அதிருப்தி எம்.எல்.ஏ.,க்கள் முடிவு..!

சிவசேனா ஆட்சி மீது அதிருப்தியில் உள்ள எம்.எல்.ஏக்கள் மும்பை திரும்பி மகாராஷ்டிரா ஆளுனரை சந்திக்கின்றனர் என தகவல் வெளியாகியுள்ளது.

Update: 2022-06-28 13:33 GMT

மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் ஆட்சி மீது அதிருப்தியில் உள்ள எம்.எல்.ஏ.க்கள்.

சிவசேனா கட்சி ஆட்சியின் மீது அதிருப்தியில் உள்ள எம்.எல்.ஏ.,க்களுக்கு மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் அழைப்பு விடுத்துள்ளார். அதில், சிவசேனா குடும்பத்தின் தலைவன் என்ற முறையில், உங்களின் உணர்வுகளை மதிக்கிறேன். நமக்கு இடையில் உள்ள பிரச்னைகளை முதலில் நாம் அமர்ந்து பேசுவோம். தீர்வு கிடைக்கும். இப்போதும் காலம் கடந்துவிடவில்லை. தயவு செய்து வந்து அமர்ந்து பேசுங்கள். சிவசேனா தொண்டர்கள் மற்றும் மக்களின் மனதில் உள்ள சந்தேகங்களை அகற்றுங்கள். இதற்கான தீர்வு நம இருதரப்பிலுமே உள்ளது என உருக்கமாக கோரியுள்ளார்.

கவுகாத்தியில் அதிருப்தி முகாமிற்கு தலைமை வகிக்கும் ஏக்நாத் ஷிண்டே கூறுகையில், விரைவில் மும்பை சென்று, பால் தாக்கரேவின் கொள்கைகளை முன்னெடுத்து செல்ல விரும்புகிறோம். என்னுடன் 50 எம்.எல்.ஏ.,க்கள் உள்ளனர். அவர்கள் விருப்பத்துடன் தான் என்னுடன் வந்தனர். நாங்கள் விரைவில் மும்பை திரும்பி மகாராஷ்டிரா ஆளுனரை சந்திப்போம் என குறிப்பிட்டார். 

Tags:    

Similar News