ராகுல் காந்தி தகுதி நீக்கம்: காங்கிரஸ் கட்சியினர் தீப்பந்தம் ஏந்தி ஊர்வலம்

முன்னாள் முதல்வர் நாராயணசாமி தலைமையில் காங்கிரஸ் கட்சியினர் தீப்பந்தம் ஏந்தி ஆளுநர் மாளிகை நோக்கி ஊர்வலமாக சென்றனர்.

Update: 2023-03-28 17:45 GMT

கையில் தீப்பந்தத்துடன் ஊர்வலம் வந்த காங்கிரஸ் கட்சியினர்.

ராகுல்காந்தியின் எம்.பி பதவி தகுதி நீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி தலைமையில் தீப்பந்தம் ஏந்தி ஊர்வலமாக சென்றபோது போலீசார் தடுத்து நிறுத்தியதால் தள்ளு முள்ளு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து நாராயணசாமி உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட காங்கிரஸ் கட்சியினரை போலீசார் கைது செய்தனர்.

ராகுல்காந்தியின் எம்.பி பதவி தகுதி நீக்கம் செய்யபப்ட்டதை கண்டித்து நாடுமுழுவதும் காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் புதுச்சேரியிலும் இரண்டு தினங்களாக காங்கிரஸ் கட்சியினர் பல்வேறு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் புதுச்சேரி மாநில இளைஞர் காங்கிரஸ் கட்சி சார்பில் அண்ணாசிலையில் இருந்து முன்னாள் முதல்வர் நாராயணசாமி தலைமையில் காங்கிரஸ் கட்சியினர் தீப்பந்தம் ஏந்தி ஆளுநர் மாளிகை நோக்கி ஊர்வலமாக சென்றனர். அண்ணாசாலையில் இருந்து நேரு வீதி வழியாக ஊர்வலம் வரும்போது போலீசார் தடுத்து நிறுத்தப்பட்டார்கள். அப்போது போலீசாருக்கும் போராட்டக்காரர்களுக்கு இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது.

இதனைத்தொடர்ந்து முன்னாள் முதல்வர் நாராயணசாமி, மாநில காங்கிரஸ் கட்சிதலைவர் சுப்ரமணியன், காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டார்கள். இதன் காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

Similar News