பெட்ரோல் விலை ரூ. 8 குறைப்பு: அதிரடி அறிவிப்பு வெளியிட்ட அரசு

பெட்ரோல் மீதான வாட் வரி குறைப்பு காரணமாக, டெல்லியில் பெட்ரோல் விலை, லிட்டருக்கு ரூ. 8 குறைந்துள்ளது.

Update: 2021-12-01 08:00 GMT

டெல்லியில், முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் ஆம் ஆத்மி கட்சியின் ஆட்சி நடைபெறுகிறது. பெட்ரோல், டீசல் விலை உயர்வு, நாடெங்கும் மக்களுக்கு பெரும் சுமையாக உள்ள நிலையில், பெட்ரோல், டீசல் மீதான வாட் வரியைக் குறைக்க வேண்டும் என்று நீண்டகாலமாக கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தது.

இந்த நிலையில், டெல்லியில் இன்று முதல்வர் கெஜ்ரிவால் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில், பெட்ரோல் மீதான வாட் வரியை 30% இல் இருந்து 19.40% ஆக குறைப்பது என முடிவெடுக்கப்பட்டது. இதன் மூலம், டெல்லியில் பெட்ரோல் விலை,  ஒரு லிட்டருக்கு ரூ. 8 குறைந்து, ரூ.103.97 என்ற விலையில் இருந்து, ரூ.95.97 ஆக குறையும். இது, இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வருகிறது. டெல்லியில் உள்ள வாகன ஓட்டிகளுக்கு, இந்த அறிவிப்பு ஆறுதலை தந்துள்ளது.

Tags:    

Similar News