டெல்லி இந்திராகாந்தி விமான நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்!

டெல்லி இந்திராகாந்தி விமான நிலையத்துக்கு மர்ம நபர் தொலைபேசியில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததாக தகவல் வெளியாகியுள்ளது.;

Update: 2021-06-14 07:20 GMT

டெல்லி இந்திரா காந்தி விமான நிலையம் உலகப்புகழ் பெற்றத. உலகிலேயே 2வது சிறந்த விமான நிலையம் என்கிற பெயரை தக்க வைத்துள்ளது.

இந்த விமான நிலையத்தை தினமும் ஆயிரக்கணக்கானோர் உபயோகித்து வருகின்றனர்.

இந்தநிலையில், இந்திராகாந்தி விமான நிலையத்துக்கு வெடிகுண்டு வைத்துள்ளதாக தொலைபேசி அழைப்பில் மர்ம நபர் தெரிவித்துள்ளார். இதனால் போலீசார், வெடிகுண்டு நிபுணர்கள் தீவிர சோதனையில் ஈடபட்டனர்.அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Tags:    

Similar News